பாடகர்கள் : ஜென்சி மற்றும் குழு
இசையமைப்பாளர் : இளையராஜா
குழு : லலலலலல லலலலலல லலலலலலா
லலலலலாலலா லலலலலலா
லலலலலாலலா லலலலலலா
லலலலலலா லலலலலலா லலலலலலா
பெண் : இரு பறவைகள்
மலை முழுவதும்
இங்கே இங்கே பறந்தன
இலை மறைவினில்
இரு கனிகளும்
அங்கே அங்கே கனிந்தன
இது கண்கள் சொல்லும் ரகசியம்
நீ தெய்வம் தந்த அதிசயம்
பெண் : இரு பறவைகள்
மலை முழுவதும்
இங்கே இங்கே பறந்தன
குழு : லா லலலலலலல லலலா
லாலலா லாலா லலலலலலல லலலா
பெண் : சாரல் தூவும் முகில்களும்
சந்தம் பாடும் மலர்களும்
சாரல் தூவும் முகில்களும்
சந்தம் பாடும் மலர்களும்
ஆனந்த புது வெள்ள நீரோட்டமும்
ஆகாயப் பூப்பந்தல் தேரோட்டமும்
ஆறோட கலை மானாக
பார்த்தன ரசித்தன ஓராயிரமே
பெண் : இரு பறவைகள்
மலை முழுவதும்
இங்கே இங்கே பறந்தன
குழு : லலலலலல லலலலலல லலலலலலா
லலலலலாலலா லலலலலலா
பெண் : பூவில் பொங்கும் நிறங்களே
பூக்கள் ஆடும் வனங்களே
எங்கெங்கும் அவர்போல நான் பார்கிறேன்
அங்கங்கு எனை போல அவர் காண்கிறார்
நீயென்றும் இனி நானென்றும்
அழைக்கவும் பிரிக்கவும் முடியாதம்மா
பெண் : இரு பறவைகள்
மலை முழுவதும்
இங்கே இங்கே பறந்தன
இலை மறைவினில்
இரு கனிகளும்
அங்கே அங்கே கனிந்தன
இது கண்கள் சொல்லும் ரகசியம்
நீ தெய்வம் தந்த அதிசயம்
லலலலலலா லாலாலலலலா
லலலலலலா லாலாலலலலா