Muthumani Chudare Vaa Song Lyrics

in Anbulla Rajinikanth

பாடகர் : கே. ஜே. யேசுதாஸ்

இசை அமைப்பாளர் : இளையராஜா

பெண் : ரஜினி அங்கிள்………..

ஆண் : முத்து மணி சுடரே வா……
முல்லை மலர் சரமே வா……

ஆண் : முத்து மணி சுடரே வா
முல்லை மலர் சரமே வா
கண்ணுறங்க நேரமானதே
கண்ணே என் பொண்ணே தாலேலோ

ஆண் : முத்து மணி சுடரே வா
முல்லை மலர் சரமே வா
கண்ணுறங்க நேரமானதே
கண்ணே என் பொண்ணே தாலேலோ

பெண் : ம்ஹ்ஹூஊம் நான் தூங்க மாட்டேன்
அங்கிள் நான் ஒளிஞ்சுக்கிறேன்..
என்ன புடிங்க பாக்கலாம்……

குழு : ………………..

ஆண் : ஆயிரம் பூவோடு பாடிடும் வண்டே
ஆசைகள் பூத்தாடும் தேன்மொழி எங்கே
அழகாய் நாள் தோறும் புதுமை கொண்டாடும்
மலரே நீ பேசு…அவளைக் கண்டாயோ

ஆண் : தானாக தள்ளாடும் பூவண்ணமே
தானாக தள்ளாடும் பூவண்ணமே
உடைகள் அணிந்து கனவு சுமந்து
நடந்த நிலவை நீயும் தேடுவாய்

பெண் : ரஜினி அங்கிள்…நான் இங்க இருக்கேன்…
இங்க…இங்க…ஹா…..ஹா…..ஹா….

ஆண் : முத்து மணி சுடரே வா
முல்லை மலர் சரமே வா
கண்ணுறங்க நேரமானதே
கண்ணே என் பொண்ணே தாலேலோ

ஆண் : காற்றினில் தேர் போல ஓடிடும் மானே
தன் வழி போனாளே…கனிமொழி எங்கே
அலை போல் பாய்ந்தோடும் முயலே நீ சொல்லு
தனியே பார்த்தாயோ…அவளும் வந்தாளோ

ஆண் : நான் தேடும் பொன்மாலை கண்டேனடி
நான் தேடும் பொன்மாலை கண்டேனடி
அசைந்து குலுங்கி சிரித்து சிரித்து
ஒளிந்த பதுமை நேரில் வந்தது…

ஆண் : முத்து மணி சுடரே வா
முல்லை மலர் சரமே வா
கண்ணுறங்க நேரமானதே
கண்ணே என் பொண்ணே தாலேலோ

ஆண் : முத்து மணி சுடரே வா
முல்லை மலர் சரமே

Leave a Comment