Raaman Kathai Kelungal Song Lyrics

in Sippikkul Muthu

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் எஸ். பி. சைலஜா

இசையமைப்பாளர் : இளையராஜா

பாடலாசிரியர் : வைரமுத்து

ஆண் : ராமன் கதை கேளுங்கள்
ராமன் கதை கேளுங்கள்
ஸ்ரீ ரகு ராமன் கதை கேளுங்கள்…….

ஆண் : ராமன் கதை கேளுங்கள்

ஆண் : அலங்கார சீதை அழகரசாளும் கோதை
விழி கண்டு குடி கொண்டு
அவள் விழி கண்டு குடி கொண்டு
மணமாலை தந்த

ஆண் : ராமன் கதை கேளுங்கள்…..

ஆண் : சீதையின் சுயம்வரம் நிச்சயிக்க பட்ட நாளிலே
ஜனகனின் மண்டபத்தில் மாலை ஏந்தி வந்த ஜானகியை
வெண்ணிலா மண்ணிலா வந்தது என்று
மன்னவர் எல்லாம் பார்க்க
ஸ்ரீ ராமச்சந்திரா மூர்த்தி
கண்ணெடுத்து பார்க்க மாட்டாரோ
என்று கவலை கொண்டார்களாம்
சீதா தேவியின் செல்ல தோழிகள்

ஆண் : ராமன் கதை கேளுங்கள்
ராமன் கதை கேளுங்கள்
ஸ்ரீ ரகு ராமன் கதை கேளுங்கள்……..

ஆண் : ராமன் கதை கேளுங்கள்…..

ஆண் : புலிகளின் பலம் கொண்ட புருஷர்கள் வந்திருந்தார்
ச நி த ப ம க ரிச
யானையின் பலம் கொண்ட வேந்தர்கள் அங்கிருந்தார்
ச க ரி க ம நி த ம நி நி

ஆண் : புலிகளின் பலம் கொண்ட புருஷர்கள் வந்திருந்தார்
தா தகித தகஜனு தா
யானையின் பலம் கொண்ட வேந்தர்கள் அங்கிருந்தார்
தக ஜனு தகதிமிதக
தோளில் மலையை தூக்கிய வீரர் வந்தார்
ரீதம பமகரீக
இடிகளை கையில் பிடிப்பவர் பலர் இருந்தார் ஆஹா….

ஆண் : நடந்தால் சீதை நடந்தால்
விழி மலர்ந்தால் சபை அளந்தால்
வரவு கண்டு அவள் அழகு கண்டு
சிவ தனுசின் நானும் வீணை போல அதிர்ந்தது

ஆண் : ராமன் கதை கேளுங்கள்
கதை கேளுங்கள்

ஆண் : வில்லொடிக்க அங்கு வந்த வேந்தர்
தம் பல்லது உடை பட விழுந்தார்
சிலர் எழுந்தார் தொடை தட்டி எழுந்தவர்கள்
முட்டி தெறித்து விட சட்டென்று பூமியில் விழுந்தார்

ஆண் : வில்லொடிக்க அங்கு வந்த வேந்தர்
தம் பல்லது உடை பட விழுந்தார்
குழு : சிலர் எழுந்தார்
ஆண் : தொடை தட்டி எழுந்தவர்கள்
முட்டி தெறித்து விட சட்டென்று பூமியில் விழுந்தார்
குழு : ஆஹா சட்டென்று பூமியில் விழுந்தார்

ஆண் : காலும் நோக இரு கையும் நோக
தம் தோளது நோகவே அழுதார்
சிலர் இடுப்பை பிடித்த படி
சுளுக்கு எடுத்த படி ஆசனம் தேடி அமர்ந்தார்
ஆஹா வீரம் இல்லையா
வில்லொடிக்க ஆண்கள் யாரும் இல்லையா

ஆண் : {ஆஹா வீரம்
ஆண் மற்றும் குழு : இல்லையா
ஆண் : வில்லொடிக்க ஆண்கள் யாரும்
ஆண் மற்றும் குழு : இல்லையா} (2)

ஆண் : ஆஹா வீரம் இல்லையா
வில்லொடிக்க ஆண்கள் யாரும் இல்லையா
குழு : தக தைய்யக தா தி மி தா

குழு : ராமாய ராம பத்ராயா ராம சந்திராய நமகா

ஆண் : தசரத ராமன்தான் தாவி வந்தான்
வில்லையே ஒரு கண்ணால் பார்த்து நின்றான்
குழு : தசரத ராமன்தான் தாவி வந்தான்
ஆண் : ஆமாம்
குழு : வில்லையே ஒரு கண்ணால் பார்த்து நின்றான்

ஆண் : சீதையை மறு கண்ணால் பார்த்து நின்றான்
சீதையை மறு கண்ணால் பார்த்து நின்றான்
மறு நொடியில் வில்லெடுத்து அம்பு தொடுத்தான்
குழு : மறு நொடியில் வில்லெடுத்து அம்பு தொடுத்தான்

ஆண் : பட பட பட பட படபட
ஒலியுடன் முறிந்தது சிவ தனுசு
அந்த ஒலியுடன் சிரித்தது அவள் மனசு
ஜெய் ஜெய ராமா சீதையின் ராமா
குழு : ஜெய் ஜெய ராமா சீதையின் ராமா

ஆண் : தசரத ராமா ஜனகன் உன் மாமா
குழு : தசரத ராமா ஜனகன் உன் மாமா

ஆண் : ஜெய் ஜெய ராமா சீதையின் ராமா
குழு : ஜெய் ஜெய ராமா சீதையின் ராமா
ஆண் : தசரத ராமா ஜனகன் உன் மாமா

பெண் : சீதா கல்யாண வைபோகமே
ஸ்ரீ ராம கல்யாண வைபோகமே
குழு : சீதா கல்யாண வைபோகமே
ஸ்ரீ ராம கல்யாண வைபோகமே

பெண் : காண காண அழகாகுமே
இன்னும் ஆயிரம் கண் வேண்டுமே
பெண் மற்றும் குழு :
காண காண அழகாகுமே
இன்னும் ஆயிரம் கண் வேண்டுமே

பெண் மற்றும் குழு :
சீதா கல்யாண வைபோகமே
ஸ்ரீ ராம கல்யாண வைபோகமே

ஆண் : ஸ்ரீ ராமானே அதோ பாரப்பா

ஆண் : அலங்கார சீதை அழகரசாளும் கோதை
விழி கண்டு குடி கொண்டு
அவள் விழி கண்டு குடி கொண்டு
மணமாலை தந்த

ஆண் : ராமன் கதை கேளுங்கள்
ஸ்ரீ ரகு ராமன் கதை கேளுங்கள்……

ஆண் : ராமன் கதை கேளுங்கள்……

Leave a Comment