பாடகர் : கே.ஜே. யேசுதாஸ்
இசையமைப்பாளர் : இளையராஜா
ஆண் : த த ரீனா ததரீனா
ம்ம் ததரீனா னா ஆஆ
ததரீனா னா னா ததரீனா
னா னா ததரீனா னா னா
னா ததரீனா னா ரே …
ஆண் : கலைவாணியே
கலைவாணியே உனை
தானே அழைத்தேன்
உயிர் தீயை வளர்த்தேன்
வர வேண்டும் வரம்
வேண்டும் துடித்தேன்
தொழுதேன் பலமுறை
நினைத்தேன் அழுதேன்
இசை தரும்
ஆண் : கலைவாணியே
உனை தானே அழைத்தேன்
உயிர் தீயை வளர்த்தேன்
வர வேண்டும் வரம்
வேண்டும் துடித்தேன்
தொழுதேன் பலமுறை
நினைத்தேன் அழுதேன்
இசை தரும் கலைவாணியே
ஆண் : சுரம் பாடி
சிரித்தாய் சிரிப்பாலே
எரித்தாய் மடிமீது
மரித்தேன் மறுஜென்மம்
கொடுத்தாய்
ஆண் : சிறு விரல்களில்
தலைகோதி மடிதனில்
எனை வளர்த்தாய்
இசை எனும் வரம் வரும்
நேரம் திசை சொல்ல
வில்லை மறந்தாய்
ஆண் : முகம் காட்ட
மறுத்தாய் ஆஆஆ
ஆஆ ஆஆ …. முகம்
காட்ட மறுத்தாய்
முகவரியை மறைத்தாய்
நீ முன் வந்து பூச்சிந்து
விழித்துளிகள் தெரிக்கிறது
துடைத்துவிடு
ஆண் : கலைவாணியே
உனை தானே அழைத்தேன்
உயிர் தீயை வளர்த்தேன்
வர வேண்டும் வரம்
வேண்டும் துடித்தேன்
தொழுதேன் பலமுறை
நினைத்தேன் அழுதேன்
இசை தரும் கலைவாணியே
ஆண் : உள்ளம் அழுதது
உன்னை தொழுதது உனது
உயிரில் இவன் பாதி கங்கை
தலையினில் மங்கை
உடலினில் சிவனும்
இவனும் ஒரு ஜாதி
ஆண் : ராமன் ஒருவகை
கண்ணன் ஒருவகை
இரண்டும் உலகில் சமநீதி
அங்கே திருமகள் இங்கே
கலைமகள் அவளும்
இவளும் சரிபாதி
ஆண் : கண்ணீர் பெருகியதே
ஆஆ ஆஆ ஆஆ ஆஆ ஆஆ
கண்ணீர் பெருகிய கண்ணில்
உன்முகம் அழகிய நிலவென
மிதக்கும் உயிரே உயிரின்
உயிரே அழகே அழகின் அழகே
ஆண் : இனி அழ வலுவில்லை
விழிகளில் துளியில்லை
இனியொரு பிரிவில்லை
துயர் வர வழியில்லை
வருவாய்