Pottene Poovilangu Song Lyrics

in Poovilangu

தமிழ்

பாடகி : எஸ். ஜானகி

இசையமைப்பாளர் : இளையராஜா

பெண் : {போட்டேனே பூ விலங்கு
அன்பாலே நீ அடங்கு} (2)

பெண் : பெண்மையின்
ஆணையை மீறாதே
கண்களை கடந்து போகாதே
இந்த பெண்மையின்
ஆணையை மீறாதே
எந்தன் கண்களை கடந்து போகாதே
போகாதே……

பெண் : போட்டேனே பூ விலங்கு
அன்பாலே நீ அடங்கு

பெண் : மலையை பிழியும்
ஆண்மை தான்
மறுக்கவில்லை உண்மை தான்
தாண்ட முடிந்தால் தாண்டு இது
உன் சீதை கிழித்த கோடுதான்

பெண் : இன்றோடு மாறிவிடு
என் காதல் மன்னவா
என் நெஞ்சின் ஆசைகளை
உன் காதில் சொல்லவா
கை சேர்த்தால் அந்த கோபம்
ஆறி போகும் வா

பெண் : போட்டேனே பூ விலங்கு
அன்பாலே நீ அடங்கு

பெண் : பெண்மையின்
ஆணையை மீறாதே
எந்தன் கண்களை கடந்து போகாதே
போகாதே……

பெண் : போட்டேனே பூ விலங்கு
அன்பாலே நீ அடங்கு

பெண் : ஆளை கொள்ளும்
திமிங்கிலம்
நூலில்தானே அகப்படும்
அன்பு என்னும் பிடியின் உள்ளே
மலையும் கூட வசப்படும்

பெண் : கண்ணோரம் காதல் இசை
இந்நேரம் பாடுவேன்
கையோடு பூவிலங்கு
எந்நாளும் போடுவேன்
கண்ணாளா உன்னை ஆளும்
தாலி நான் செய்தேன்

பெண் : போட்டேனே பூ விலங்கு
அன்பாலே நீ அடங்கு
பெண்மையின் ஆணையை மீறாதே
எந்தன் கண்களை கடந்து போகாதே
போகாதே……

பெண் : போட்டேனே பூ விலங்கு
அன்பாலே நீ அடங்கு

Leave a Comment