Unnai Kaanum Neram Song Lyrics

in Unnai Naan Sandhithaen

பாடகர்கள் : கே. ஜே. யேசுதாஸ் மற்றும் வாணி ஜெயராம்

இசையமைப்பாளர் : இளையராஜா

குழு : ஆ…..ஆ…..ஆ…..ஆ…..ஆ…..
ஆ…..ஆ…..ஆ…..ஆ…..ஆ…..
ஆ…..ஆ…..ஆ…..ஹா…..ஆ…..
ஆ…..ஆ…..ஆ….ஹ…..ஆ….ஹா….ஆ…..

ஆண் : உன்னைக் காணும் நேரம் நெஞ்சம்
ராகம் பல நூறு
பாடும் தினம்தோறும்
காலம் நேரம் ஏதுமில்லை

ஆண் : உன்னைக் காணும் நேரம் நெஞ்சம்

பெண் : கண்ணில் மின்னும் காதல் ஜோதி
கன்னி மேனி மானின் ஜாதி

ஆண் : கண்கள் சொல்லும் காமன் சேதி
கண்டும் என்ன நாணம் மீதி

பெண் : ஒரு மாலை தோளில் சேரும்
திருநாளில் நாணம் தீரும்
ஒரு மாலை தோளில் சேரும்
திருநாளில் நாணம் தீரும்

ஆண் : தொட வேண்டி கைகள் ஏங்கும்
படவேண்டும் பார்வை எங்கும்

பெண் : இந்த பார்வை ஒன்று போதும்
போதும் இடைவேளை
மீதி இனி நாளை

ஆண் : மாலை வேளை வீணாய் போகும்
இந்த பார்வை ஒன்று போதும்…..

குழு : தையாரே……தையாரே……

குழு : தையார தந்த தைய தையா
தையார தந்த தைய தையா
தையார தந்த தைய தந்தா
தையார தந்த தா

ஆண் : கண்ணால் உன்னைக் கண்டால் போதும்
பன்னீர் பூக்கள் பந்தல் போடும்

பெண் : மன்னா உன்னை மார்பில் தாங்கும்
பொன்னாள் கண்டே பெண்மை தூங்கும்

ஆண் : மடி மீது சாயும் சாபம்
தரவேண்டும் ஆயுள் காலம்
மடி மீது சாயும் சாபம்
தரவேண்டும் ஆயுள் காலம்

பெண் : பலகோடி காலம் வாழ
பனி தூவி வானம் வாழ்த்தும்

ஆண் : உன்னைக் காணும் நேரம் நெஞ்சம்

பெண் : ராகம் பல நூறு

ஆண் : பாடும் தினம்தோறும்

பெண் : காலம் நேரம் ஏதுமில்லை

ஆண் : உன்னைக் காணும் நேரம் நெஞ்சம்

Leave a Comment