பாடகர்கள் : எஸ். ஜானகி
மற்றும் டிஎஸ். ராகவேந்திரா
இசை அமைப்பாளர் : இளையராஜா
ஆண் : சா……..ஸா……..
மக மக சா ..மக மக சா ..சா….
பெண் : அழகு மலராட
அபிநயங்கள் கூட
சிலம்பொலியும் புலம்புவதை கேள்
என் சிலம்பொலியும் புலம்புவதை கேள்
பெண் : அழகு மலராட
அபிநயங்கள் கூட
சிலம்பொலியும் புலம்புவதை கேள்
பெண் : விரல் கொண்டு மீட்டாமல்
வாழ்கின்ற வீணை
குளிர் வாடை கொஞ்சமல்
கொதிக்கின்ற சோலை
பகலிரவு பல கனவு
இரு விழியில் வரும்பொழுது
பெண் : அழகு மலராட
அபிநயங்கள் கூட
சிலம்பொலியும் புலம்புவதை கேள்
ஆண் : …………………………………..
பெண் : ஆஆ….ஆஆ…..ஆஆ………
ஆகாயம் இல்லாமலே ஒரு நிலவு
தரை மீது தல்லாடுது
ஆதாரம் இல்லாமலே ஒரு கொடியும்
ஆடாமல் தலை சாயுது
பெண் : தாளத்தில் சேராத
தனி பாடல் ஒன்று
சங்கீதம் காணாமல்
தவிக்கின்றது
பெண் : விடியாத இரவேதும்
கிடையாது என்று
ஊர் சொன்ன வார்தைகள்
பொய்யானது
பெண் : வசந்தம் இனி வருமா
வாழ்வினிமை பெருமா
ஒரு பொழுது மயக்கம்
ஒரு பொழுது கலக்கம்
பதில் ஏதும் இல்லாத கேள்வி
பெண் : அழகு மலராட
அபிநயங்கள் கூட
சிலம்பொலியும் புலம்புவதை கேள்
பெண் : விரல் கொண்டு மீட்டாமல்
வாழ்கின்ற வீணை
குளிர் வாடை கொஞ்சமல்
கொதிக்கின்ற சோலை
பகலிரவு பல கனவு
இரு விழியில் வரும்பொழுது
பெண் : அழகு மலராட
அபிநயங்கள் கூட
சிலம்பொலியும் புலம்புவதை கேள்
பெண் : ஆஆ….ஆஆ…..ஆஆ………
ஊதாத புல்லாங்குழல் எனதழகு
சூடாத பூவின் மடல்
தேய்கின்ற மஞ்சள் நிலா
ஒரு துணையை
தேடாத வெள்ளை புற
பெண் : பூங்காற்று மெதுவாக
பட்டாலும் போதும்
பொன்மேனி நெருப்பாக
கொதிகின்றது
பெண் : நீரூற்று பாயாத
நிலம்போல நாலும்
என் மேனி தரிசாக
கிடக்கின்றது
பெண் : {தனிமையிலும் தனிமை
கொடுமையிலும் கொடுமை
இனிமை இல்லை வாழ்வில்
எதற்கு இந்த இளமை} (2)
வேறென்ன நான் செய்த பாவம்
பெண் : அழகு மலராட
அபிநயங்கள் கூட
சிலம்பொலியும் புலம்புவதை கேள்
பெண் : விரல் கொண்டு மீட்டாமல்
வாழ்கின்ற வீணை
குளிர் வாடை கொஞ்சமல்
கொதிக்கின்ற சோலை
பகலிரவு பல கனவு
இரு விழியில் வரும்பொழுது
பெண் : அழகு மலராட
அபிநயங்கள் கூட
சிலம்பொலியும் புலம்புவதை கேள்
ஆண் : …………………………………………….