Karudhu Kathaaduthu Song Lyrics

in Niyayam

பாடகர்கள் : எஸ். ஜானகி மற்றும் மலேசியா வாசுதேவன்

இசையமைப்பாளர் : இளையராஜா

ஆண் : கருது காத்தாடுது
குருவி கூத்தாடுது
பசும் தோப்பெல்லாம் பூப்பூக்க
ஒன்ன பூவாட்டம் நான் பாக்க

ஆண் : கருது காத்தாடுது
குருவி கூத்தாடுது
பசும் தோப்பெல்லாம் பூப்பூக்க
ஒன்ன பூவாட்டம் நான் பாக்க

ஆண் : வரும் தை மாசம் கல்யாணம்
ராவெல்லாம் கச்சேரி நீ….. படிக்க
இந்தப் பாலாறும் தேனாறும்
வேறாரும் காணாம நான் குளிக்க

பெண் : கருது காத்தாடுது
குருவி கூத்தாடுது
பசும் தோப்பெல்லாம் பூப்பூக்க
என்ன பூவாட்டம் நீ பாக்க……

ஆண் : மீனே செம்மீனே
உன்ன ஓட தாலாட்ட
பூவே செம்பூவே
பனி வாட பாராட்ட

பெண் : ஒடம்பு புண்ணாகத்தான்
ஒதடு ஒண்ணாகத்தான்
ஒரசக் கூடாதையா சாமி

பெண் : ஆச கொண்டலும்தான்
அளவு இல்லாமத்தான்
மழைய தாங்காதையா பூமி

ஆண் : வளை ஆடும் கையோடும்
கிளையாடும் கனியோடும்
விளையாடவா
பெண் : ஹோ ஒரு பாதி பசியாற
மறு பாதி ருசியேற
பரிமாற வந்தாயோ நீதான்

ஆண் : கருது காத்தாடுது
குருவி கூத்தாடுது
பசும் தோப்பெல்லாம் பூப்பூக்க
ஒன்ன பூவாட்டம் நான் பாக்க

பெண் : வரும் தை மாசம் கல்யாணம்
ராவெல்லாம் கச்சேரி நீ….. படிக்க
இந்தப் பாலாறும் தேனாறும்
வேறாரும் காணாம நான் குளிக்க

ஆண் : ஹேய் கருது காத்தாடுது
குருவி கூத்தாடுது
பசும் தோப்பெல்லாம் பூப்பூக்க
ஒன்ன பூவாட்டம் நான் பாக்க

ஆண் : கேட்டா நான் கேட்டா
தர மாட்டே நீயாகத்தான்
தொடணும் கை படணும்
சுகம் மலரும் தானாகத்தான்

பெண் : இரவில் ஒன்னாட்டம்தான்
எனக்கு திண்டாட்டம்தான்
மனசில் போராட்டம்தான் லேசா ஹாஹா
படுக்கை முள்ளாச்சுது
பாலும் கள்ளாச்சுது
நிலவும் தீயாச்சுது ராசா

ஆண் : இனி மேலும் தாங்காது
இரு கண்ணும் தூங்காது
உறவாட வா
பெண் : ஹே அது போக மோதாதே
அலையாட்டம் பாயாதே
அம்மாடி என்னாவேன் நான்தான்

ஆண் : கருது காத்தாடுது
குருவி கூத்தாடுது
பசும் தோப்பெல்லாம் பூப்பூக்க
ஒன்ன பூவாட்டம் நான் பாக்க

பெண் : வரும் தை மாசம் கல்யாணம்
ராவெல்லாம் கச்சேரி நீ….. படிக்க
இந்தப் பாலாறும் தேனாறும்
வேறாரும் காணாம நான் குளிக்க

பெண் : கருது காத்தாடுது
குருவி கூத்தாடுது
பசும் தோப்பெல்லாம் பூப்பூக்க
என்ன பூவாட்டம் நீ பாக்க……

Leave a Comment