in Vellai Roja
பாடகர் : மலேஷியா வாசுதேவன்
இசை அமைப்பாளர் : இளையராஜா
ஆண் : உலகமெல்லாம் பருவமழை
ஒத்தபடி பெய்யட்டும்
உழவரெல்லாம் தானியத்தை
உவர்ப்புடனே பெருக்கட்டும்
பல தொழில்கள் புரிகின்ற
பாட்டாளி உயரட்டும்
நல்வாழ்வை அளிக்கும்
மெய்ஞானம் ஒளி வீசட்டும்
நம் கடமை அறவாழ்வின்
நாட்டத்தில் சிறக்கட்டும்
வாழ்க வையகம் வாழ்க வளமுடன்
ஆண் : தேவனின் கோவிலிலே
யாவரும் தீபங்களே
குழு : தேவனின் கோவிலிலே
யாவரும் தீபங்களே
ஆண் : பாவிகள் யாரும் இல்லை
பேதங்கள் ஏதுமில்லை
குழு : பாவிகள் யாரும் இல்லை
பேதங்கள் ஏதுமில்லை
ஆண் : மேரியின் பூமடி மேவிய
தேவனின் கோவிலிலே
யாவரும் தீபங்களே
குழு : தேவனின் கோவிலிலே
யாவரும் தீபங்களே
ஆண் : தோட்டத்து பூக்களைப்போல்
புன்னகை வீசிடுங்கள்
வாட்டத்தை போக்குகின்ற
வார்த்தையை பேசிடுங்கள்
ஆண் : வெள்ளை மனம் பிள்ளை மனம்
கோடி பெறும்
வையகமே கையருகே
ஓடி வரும்
நாளைய ராஜ்ஜியமே
உங்களை சேர்ந்திடுமே
குழு : லாலால லாலால லா
லாலால லாலால லா
ஆண் : முத்தினமே ரத்தினமே
சித்திரமே சிறுமலரே
ஆண் : தேவனின் கோவிலிலே
யாவரும் தீபங்களே
குழு : தேவனின் கோவிலிலே
யாவரும் தீபங்களே
ஆண் : பாவிகள் யாரும் இல்லை
பேதங்கள் ஏதுமில்லை
குழு : பாவிகள் யாரும் இல்லை
பேதங்கள் ஏதுமில்லை
ஆண் : மேரியின் பூமடி மேவிய
தேவனின் கோவிலிலே
யாவரும் தீபங்களே
குழு : தேவனின் கோவிலிலே
யாவரும் தீபங்களே
குழு : ………………………………..
ஆண் : மேகங்கள் போல் இருந்து
ஊருக்கு நீர் கொடுங்கள்
மரங்களைப்போல் வளர்ந்து
யாருக்கும் நிழல் கொடுங்கள்
ஆண் : தென்றல் அது உள்ளவரை
பேர் திகழும்
திங்களுடன் செங்கதிரும்
தாள் பணியும்
ஆண் : நல்லவர் உள்ளங்களே
நாயகன் இல்லங்களே
குழு : லாலால லாலால லா
லாலால லாலால லா
ஆண் : வஞ்சமில்லா நெஞ்சமுடன்
கொஞ்சி வரும் குழந்தைகளே
ஆண் : தேவனின் கோவிலிலே
யாவரும் தீபங்களே
குழு : தேவனின் கோவிலிலே
யாவரும் தீபங்களே
ஆண் : பாவிகள் யாரும் இல்லை
பேதங்கள் ஏதுமில்லை
குழு : பாவிகள் யாரும் இல்லை
பேதங்கள் ஏதுமில்லை
ஆண் : மேரியின் பூமடி மேவிய
தேவனின் கோவிலிலே
யாவரும் தீபங்களே
குழு : தேவனின் கோவிலிலே
யாவரும் தீபங்களே
ஆண் : தேவனின் கோவிலிலே
யாவரும் தீபங்களே
குழு : தேவனின் கோவிலிலே
யாவரும் தீபங்களே