Mannil Vanthu Minnum Song Lyrics

in Enga Thambi

பாடகர்கள் : மனோ மற்றும் குழு

இசையமைப்பாளர் : இளையராஜா

ஆண் : மண்ணில் வந்து மின்னும்
புது மின்னல் இங்கே
கண்ணில் அன்பு துள்ளும்
இளம் மன்னன் இங்கே
காட்சி எல்லாம் பார்க்கலாமா
கணக்கு போட்டு சேர்க்கலாமா
உறவே நீ வா

குழு : மண்ணில் வந்து மின்னும்
புது மின்னல் இங்கே
கண்ணில் அன்பு துள்ளும்
இளம் மன்னன் இங்கே…ஹே

ஆண் : பூங்குயில்கள் பாடும்
என் சோலை எங்கும்
பொன் மயில்கள் ஆடும்
என் மேடை எங்கும்
வேங்கை பாய்ச்சல் உண்டு
நான் வேங்கை இல்லை
வேலின் வீச்சும் உண்டு
நான் வேலும் இல்லை

ஆண் : வம்பிழுக்க இங்கு வந்தால்
கம்பெடுப்பேன்
அன்பு கொண்டு அன்பு செய்தால்
நண்பனாவேன்
கால நேரம் பார்த்து
இங்கு ஆட வந்தேன்

ஆண் : மண்ணில் வந்து மின்னும்
புது மின்னல் இங்கே
கண்ணில் அன்பு துள்ளும்
இளம் மன்னன் இங்கே

குழு : காட்சி எல்லாம் பார்க்கலாமா
கணக்கு போட்டு சேர்க்கலாமா
உறவே நீ வா

குழு : மண்ணில் வந்து மின்னும்
புது மின்னல் இங்கே
கண்ணில் அன்பு துள்ளும்
இளம் மன்னன் இங்கே…
ஆண் : ஹே ஹே ஹே ஹேய்

ஆண் : நான் நடக்கத் தென்றல்
மலர் பாதை போடும்
நான் நினைக்கும் வண்ணம்
நல்ல நேரம் கூடும்
சாகசங்கள் உண்டு சந்நியாசி இல்லை
பார் முழுக்கச் செல்வேன்
பரதேசி இல்லை

ஆண் : எந்த இசை வேண்டும்
வந்து கேட்டுக் கொள்ளு
எந்த மொழி பாடல் வேண்டும்
வாங்கிச் செல்லு
தேடி வந்து நாடி வந்து
கூடி வந்தால்

ஆண் : மண்ணில் வந்து மின்னும்
புது மின்னல் இங்கே
கண்ணில் அன்பு துள்ளும்
இளம் மன்னன் இங்கே

குழு : காட்சி எல்லாம் பார்க்கலாமா
கணக்கு போட்டு சேர்க்கலாமா
உறவே நீ வா

குழு : மண்ணில் வந்து மின்னும்
புது மின்னல் இங்கே
கண்ணில் அன்பு துள்ளும்
இளம் மன்னன் இங்கே…

ஆண் மற்றும் குழு :
ஹே மண்ணில் வந்து மின்னும்
புது மின்னல் இங்கே
கண்ணில் அன்பு துள்ளும்
இளம் மன்னன் இங்கே…

Leave a Comment