பாடகர் : கங்கை அமரன்
இசையமைப்பாளர் : இளையராஜா
ஆண் : அன்னத்த நெனச்சேன் உள்ளத்த கொடுத்து
என்னத்த சொல்வேன் புரியல
அன்னத்த நெனச்சேன் உள்ளத்த கொடுத்து
என்னத்த சொல்வேன் புரியல
சஞ்சலமோ கொஞ்சம் இல்ல
நெஞ்சத்துல ஈரம் இல்ல
சந்தனக் காத்தே நீயே சொல்லு……
ஆண் : அன்னத்த நெனச்சேன் உள்ளத்த கொடுத்து
என்னத்த சொல்வேன் புரியல
ஆண் : அன்பிலே எறிஞ்சது ஆனந்த விளக்கு
எப்படி அணைஞ்சது யார் சொல்வது
நித்தமும் மனசுல நான் போட்ட மால
இன்னொரு கையுல ஏன் சேர்ந்தது
ஆண் : கன்னி பொண்ணு சொன்ன சொல்லு
போனது காத்தோடு
நெஞ்சுல இருப்பது எறியாத நெருப்பு
உண்மைய சொல்வது பெண் மானின் பொறுப்பு
ஆண் : அன்னத்த நெனச்சேன் உள்ளத்த கொடுத்து
என்னத்த சொல்வேன் புரியல
சஞ்சலமோ கொஞ்சம் இல்ல
நெஞ்சத்துல ஈரம் இல்ல
சந்தனக் காத்தே நீயே சொல்லு……