பாடகர் : உன்னி கிருஷ்ணன்
இசை அமைப்பாளர் : ஏ. ஆர் . ரஹ்மான்
ஆண் : சகியே நீ தான் துணையே..
விழி மேல் அமர்ந்த இமையே..
ஆதவன் போனால்
அகல் தான் ஒளியே
ஆண் : சகியே நீ தான் துணையே..
விழி மேல் அமர்ந்த இமையே..
இனம் தெரியாமல்
இணைந்தோம் கிளியே..
சகியே நீ தான் துணையே..
ஆண் : பூமிக்கு நீரிடம்
பேதங்கள் இல்லை..
பூவுக்கும் காற்றுக்கும்
வாதங்கள் இல்லை…
நான்கு கண்கள்
கலந்த பின்னாலே..
நால்வகை வேதங்கள்
தடுப்பதும் வீணே..
ஆண் : சகியே நீ தான் துணையே..
விழி மேல் அமர்ந்த இமையே..
ஆண் : {பூமியை கேட்டா
வான்முகில் தூவும்..
பூக்களை கேட்டா
வண்டுகள் பாடும்..} (2)
ஆண் : வீதியை கேட்டா
தென்றலும் வீசும்..
சாதியை கேட்டா
காதலும் தோன்றும்..
ஆண் : சகியே நீ தான் துணையே..
விழி மேல் அமர்ந்த இமையே..
ஆண் : காதலின் ராஜ்யத்தில்
விசித்திர வழக்கம்
கண்களை வாங்கி கொண்டு
இதயத்தை கொடுக்கும்..
ஆண் : ஒருவிழி பார்வை
உயிரையும் எடுக்கும்
மறுவிழி பார்வை
உயிரையும் கொடுக்கும்..
இருவிரல் தீண்டினால்
சாதிகள் தடுக்கும்…
இதயங்கள் தீண்டினால்
எது நம்மை பிரிக்கும்..
ஆண் : சகியே நீ தான் துணையே..
விழி மேல் அமர்ந்த இமையே..
ஆதவன் போனால்
அகல் தான் ஒளியே
ஆண் : சகியே நீ தான் துணையே..
இனம் தெரியாமல்
இணைந்தோம் கிளியே..
சகியே நீ தான் துணையே..
விழி மேல் அமர்ந்த இமையே.