Suttum Vizhi Sudare Song Lyrics

in Kandukondain Kandukondain

பாடகர் : ஹரிஹரன்

இசை அமைப்பாளர் : ஏ. ஆர். ரஹமான்

ஆண் : சுட்டும் விழிச் சுடர் தான்
கண்ணம்மா
சூரிய சந்திரரோ
வட்டக் கரிய விழி கண்ணம்மா
வானக்கருமை கொலோ

ஆண் : பட்டுக் கருநீலப் புடவை
பதித்த நல்வயிரம்
நட்ட நடுநிசியில் தெரியும்
நட்சத்திரங்களடீ

ஆண் : சோலை மலரொளியோ
உனது சுந்தரப் புன்னகை தான்
நீலக் கடலலையே
உனது நெஞ்சின் அலைகளடீ

ஆண் : கோலக் குயிலோசை
உனது குரலின் இனிமையடீ
வாலைக் குமரியடீ கண்ணம்மா
மருவக்காதல் கொண்டேன்

ஆண் : சாத்திரம் பேசுகிறாய் கண்ணம்மா
சாத்திரம் ஏதுக்கடீ
ஆத்திரம் கொண்டவர்க்கே கண்ணம்மா
சாத்திரம் உண்டோடி

ஆண் : மூத்தவர் சம்மதியில் வதுவை
முறைகள் பின்பு செய்வோம்
காத்திருப்பேனோடீ இது பார்
கன்னத்து முத்தமொன்று

Leave a Comment