Rajyama Illai Emaiyama Song Lyrics

in Baba

தமிழ்

பாடகர் : ஜெயச்சந்திரன்

இசையமைப்பாளர் : எ.ஆர். ரஹ்மான்

ஆண் : ராஜ்யமா இல்லை
இமயமா எங்கிவன் நாளை
எங்கிவன் மன்னனா இல்லை
மௌல்வியா யாரிவன் நாளை
யாரிவன்

ஆண் : ஆயிரம் அதிசயம்
அமைந்தது பாபா ஜாதகம்
ஆயிரம் அதிசயம் அமைந்தது
பாபா ஜாதகம்

ஆண் : கேள்வியாய்
வாழ்கிறான் மௌனத்தை
ஆள்கிறான்

ஆண் : ராஜ்யமா இல்லை
இமயமா ராஜ்யமா இல்லை
இமயமா

ஆண் : மகனில்லை மகனில்லை
என்னும் நாளில் மடியில் வந்த
ராஜாவை தமிழர்கள் மனையெங்கும்
மனம் வீச தெய்வம் தந்த ரோஜாவை

ஆண் : முதுகினில் புகழினை
தூக்காமல் மூட்டை தூக்க
பார்த்தாலே விதியிது விதியிது
என எண்ணி மூச்சு வாங்கி
வேர்த்தாலே

ஆண் : தொழில் என்ன
செய்தாலும் இழிவில்லை
என்பானே உழைக்காமல்
உண்டால் தான் பிழை
என்று சொல்வானே

ஆண் : ஏற்றமோ
இறக்கமோ எதையுமே
ஏற்பவன்

ஆண் : ஆயிரம் கோடி
அதிசயம் அமைந்தது
பாபா ஜாதகம்

ஆண் : கடவுளை மறுத்து
இவன் நாள் தோறும்
கூறினானே நாத்தீகம்
பகுத்தறிவாளனின்
நெஞ்சினிலே பூத்த
தென்ன ஆதிக்கம்

ஆண் : திருமகன் வருகிற
திருநீரை நெற்றி மீது
தினம் பூசி

ஆண் : அதிசயம் அதிசயம்
பெரியார் தான்
ஆனதென்ன ராஜாஜி

ஆண் : தனது அன்பு
தாயை கை தொழும்
பாபா தான் சிந்தையில்
எந்நாளும் சின்னஞ்சிறு
பாபா தான்

ஆண் : ஏழைகள்
பார்வையில் முழு
மனிதனாய் தெரிகிறான்

ஆண் : ராஜ்யமா இல்லை
இமயமா ராஜ்யமா இல்லை
இமயமா

Leave a Comment