Kaaviriya Kaaviriya Song Lyrics

in Desam

பாடகி : மதுஸ்ரீ

இசை அமைப்பாளர் : ஏ .ஆர் . ரஹ்மான்

பெண் : காவிரியா காவிரியா
மனதுக்குள் பாயரியா
பூம்புனலாய் புகுந்ததினால்
கண் வழியா ஹோய்

பெண் : கண் விரலால் கண் விரலால்
பெண் உயிரை மீட்டுரியா
பூ முடிக்கும் மோகத்திலே
நீ வரியா ஹோய்

பெண் : நானா உன்னை நினைத்தேன்
நெடுநாள் விலகி இருந்தேன்
தானாய் என்னை இழந்தேன்
தடுக்கி உன் மேல் விழுந்தேன்
மயிலின் இறகால் மனதை நீவிரியா
நீ வரியா ஹோய்

பெண் : காவிரியா காவிரியா
மனதுக்குள் பாயரியா
பூம்புனலாய் புகுந்ததினால்
கண் வழியா ஹோய்

பெண் : ………………………….

பெண் : உன் பெயரை எந்த நாளிலும்
உள்ளத்தில் எழுதவில்லையே
இணை ஒரு வார்த்தைதான்
கேட்காமலே ஹோய்

பெண் : என் ஜீவன் உன்னை சேர்ந்ததோ
என்னுள்ளே என்ன நேர்ந்ததோ
உதட்டினில் நாளெல்லாம் உன் பாடலே

பெண் : காதல் வரும் தேதி கிழமை
எதுவென எவர்க்கும்
காலண்டர் காட்டாதே ..
அதுவாக வேர்விட
அன்பை நீ நீர் விடு
பூ பூவாய் பூக்கும் வண்ணம்
பேரின்பம் உண்டாச்சோ
பெண்பாவை உனது ஆச்சோ

பெண் : காவிரியா காவிரியா
மனதுக்குள் பாயரியா
பூம்புனலாய் புகுந்ததினால்
கண் வழியா ஹோய்

பெண் : ……………………………

பெண் : வானம் முதல் முறை
மழை வார்க்கும் நிலம் என
நெஞ்சில் ஒரு சீதனம்
காரணம் நீ தான் நண்பனே

பெண் : யாரை முதல் முறை
விரல் மீட்டும் சுகம் என
நெஞ்சில் ஒரு வாகனம்
காரணம் நீ தான் அன்பனே

பெண் : மங்கை அல்ல
மல்லிகை பூவிது
உனை அன்றி வேறு
கைகள் தொடலாமா

பெண் : மழை கூந்தல் ஏன் வளர்த்தேன்
பூ முடிக்க நான் வளர்த்தேன்
மாலையிட்டு பூ முடிக்கும்
மணநாள் தான் வருமா…
மணநாள் தான் வருமா….

பெண் : காவிரியா காவிரியா
மனதுக்குள் பாயரியா
பூம்புனலாய் புகுந்ததினால்
கண் வழியா ஹோய் 

Leave a Comment