Yedho Yedho Ondru Song Lyrics

in Enakku 20 Unakku 18

பாடகி : கோபிகா பூர்ணிமா

பாடகர் : கார்த்திக்

இசையமைப்பாளர் : எ.ஆர். ரஹ்மான்

ஆண் : ஆஆ ஆஆ
ஆஆஹா
பெண் : ஓஹோஓஓஓஓ
ஓஓஓஹ்ம்ம்

ஆண் : ஏதோ ஏதோ
ஒன்று எனக்குள்ளே
நுழைந்து ஆயுள் ரேகை
நீள செய்கிறதே

பெண் : காதல் ரேகை
ஒன்று இதயத்தை திறந்து
செல்லமாக மிரட்டி
செல்கிறதே

ஆண் : உயிரே இதயம்.
பெண் : உனக்கே உனக்கே

ஆண் : உன்னை போல்
ஒரு பெண்ணின் அருகிலே
மௌனம் கொல்வது கஷ்டம்
நாம் பேசிகொள்ளாத நிமிஷம்
எல்லாமே நஷ்டம்

பெண் : சொற்கள் என்பதில்
மிஞ்சும் மொத்தமும் மௌனம்
என்பதில் உள்ளது உள்ளது
மௌன மிஞ்சினால் பேசி
விடுவதே நல்லது

ஆண் : சூரியனை போலே
என் முன்பு வந்தாய் பனி
துளி போலே பணிந்து
விட்டேனே

பெண் : உயிரே இதயம்.
ஆண் : உனக்கே உனக்கே

ஆண் : கனவாய் இருந்தால்
பெண் : எதிலே இருப்போம்
ஆண் : நிஜமாய் இருந்தால்.
பெண் : இன்னும் கேட்போம்

ஆண் : கனவாய் இருந்தால்
எதிலே இருப்போம் நிஜமாய்
இருந்தால்.இன்னும் கேட்போம்

பெண் : கனவாய் இருந்தால்
நிஜமாய் இருந்தால்

பெண் : ஏதோ ஏதோ
ஒன்று எனக்குள்ளே
நுழைந்து ஆயுள் ரேகை
நீள செய்கிறதே

ஆண் : காதல் ரேகை
ஒன்று இதயத்தை திறந்து
செல்லமாக மிரட்டி
செல்கிறதே

ஆண் : உள்ளே போகிற
சுவாசம் என்பது வெளியில்
வருவது நியாயம் நியாயம்
வெளி வரும் சுவாசம் வாசம்
தருவதே மாயம்

பெண் : கண்கள் காண்கிற
கனவு என்பது கருப்பு
வெள்ளையில் தோன்றும்
தோன்றும் வண்ணமாக அது
மாறிவிட்டதே மாயம்

ஆண் : போதி மரம் போலே
உந்தன் கண்கள் பார்க்க
உந்தன் பார்வையாலே
ஞானம் அடைந்தேனே

பெண் : உயிரே இதயம்.
ஆண் : உனக்கே உனக்கே

ஆண் & பெண் : ஏதோ ஏதோ
ஒன்று எனக்குள்ளே
நுழைந்து ஆயுள் ரேகை
நீள செய்கிறதே

ஆண் & பெண் : காதல் ரேகை
ஒன்று இதயத்தை திறந்து
செல்லமாக மிரட்டி
செல்கிறதே

ஆண் & பெண் : ஆஆ ஆஆ
ஆஆ ஆஹா ஆஆ ஆஆ

Leave a Comment