Naetru Aval Song Lyrics

in Maryan

பாடகர்கள் : விஜய் பிரகாஷ் மற்றும் சின்மயி

இசையமைப்பாளர் : ஏ. ஆர். ரஹ்மான்

ஆண் : நேற்று அவள் இருந்தாள்
அவளோடு நானும் இருந்தேன்
பெண் : ஹேய்… மரியான்… வா…

ஆண் : நேற்று அவள் இருந்தாள்
அவளோடு நானும் இருந்தேன்
பெண் : இருந்தேன்…

ஆண் : நேற்று அவள் இருந்தாள்
அவளோடு நானும் இருந்தேன்
ஆகாயத்தில் நூறு நிலாக்களும்
அங்கங்கே நீலப் புறாக்களும் பறந்தன
பெண் : ஹா…..ஆஅ……

ஆண் : காற்றெல்லாம் அவள் தேன் குரலாய்
இருந்தது
மணலெல்லாம் அவள் பூவுடலாய்
மலர்ந்தது

ஆண் : நேற்று அவள் இருந்தாள்
அவளோடு நானும் இருந்தேன்
ஆகாயத்தில் நூறு நிலாக்களும்
அங்கங்கே நீலப் புறாக்களும் பறந்தன

ஆண் : காற்றெல்லாம் அவள் தேன் குரலாய்
இருந்தது
மணலெல்லாம் அவள் பூவுடலாய்
மலர்ந்தது

பெண் : ஹா…..ஆ…..ஆ…..
நேற்று எந்தன் மூச்சினில்
உன் காதல் அல்லால் காற்று இல்லையே
நேற்று எந்தன் மூச்சினில்
உன் காதல் அல்லால் காற்று இல்லையே

ஆண் : நேற்று எந்தன் ஏட்டில்
சோகம் என்னும் சொல் இல்லை இல்லை
பெண் : நேற்று எந்தன் கை வளையல்
இசைத்ததெல்லாம் உன் இசையே
ஆண் : வானே நீ இன்று அந்த
நேற்றுவரை கொண்டு வா

பெண் : நேற்று நீ இருந்தாய்
உன்னோடு நானும் இருந்தேன்
ஆண் : இருந்தாய்… இருந்தோம்…

பெண் : நேற்று நீ இருந்தாய்
உன்னோடு நானும் இருந்தேன்
ஆண் : ஹ்ம்ம் ம்ம்ம்
பெண் : ஆகாயத்தில் நூறு நிலாக்களும்
இருவர் : அங்கங்கே நீலப் புறாக்களும் பறந்தன

பெண் : அலையெல்லாம் நீ எங்கே எங்கே
என்றது
கரை வந்த அலை அங்கே ஏங்கி நின்றது

ஆண் : நேற்று அவள் இருந்தாள்
அவளோடு நானும் இருந்தேன்
ஆகாயத்தில் நூறு நிலாக்களும்
அங்கங்கே நீலப் புறாக்களும் பறந்தன

ஆண் : காற்றெல்லாம் அவள் தேன் குரலாய்
இருந்தது
மணலெல்லாம் அவள் பூவுடலாய்
மலர்ந்தது

Leave a Comment