Alli Arjuna Song Lyrics

in Kaaviya Thalaivan

பாடகர்கள் : ஹரிஹரன் மற்றும் பேலா ஷிண்டே

இசை அமைப்பாளர் : ஏ. ஆர். ரகுமான்

ஆண் : {வந்தனம் வந்தனம்
வந்தனம் வந்தனம்
எல்லோருக்கும் தந்தனம் தந்தனம்} (2)

ஆண் : குந்தனும் குந்தனும்
குந்தனும் குந்தனும்
இடம் பிடிக்க முந்தணும் முந்தணும்

ஆண் : யாதவனாம் அந்த மாதவனும்
அவன் மச்சுனனாம் அந்த அர்ஜுனனும்
யாத்திரை வருகையிலே
தீர்த்த யாத்திரை வருகையிலே
நாடு கடந்து காடு கடந்து
மதுரைக்கு வாராக

ஆண் : தென் மதுரைக்கு வாராக
அங்கு நடப்பது அல்லி ராஜ்ஜியம்
அத்தனை ஆண்களும் சுத்த பூஜ்ஜியம்

ஆண் : அல்லியோ புது ரோசா
பார்த்தார் அர்ஜுன மகராசா
அல்லி மலருல கள்ளு வழியுது
அர்ஜுனன் முகத்துல ஜொள்ளு வழியுது
ஆரம்பமாகுது நாடக காதலு
ஆணுக்கும் பெண்ணுக்கும் நடக்குற மோதலு

ஆண் : அல்லி வருகிறாள் அல்லி வருகிறாள்
அழகி அவள் பேரழகி
அல்லி வருகிறாள் அல்லி வருகிறாள்
அழகி அவள் பேரழகி

குழு : முகத்தழகி ஆமா முகத்தழகி
மருதாணி பூசிய நகத்தழகி
கோவில் தூண் போல தொடையழகி
கொம்பேறி மூக்கன் போல சடையழகி

ஆண் : அவ நடக்குற நடைய பாத்து
குழு : தென்றல் காத்து …அத பாத்து
உடல் வேர்த்து உடல் தோர்த்து
அல்லி வருகிறாளே

ஆண் : அல்லி வருகிறாள் அல்லி வருகிறாள்
அழகி அவள் பேரழகி
அல்லி வருகிறாள் அல்லி வருகிறாள்
அழகி அவள் பேரழகி

பெண் : பிரியசகியே பிரியசகியே
மழைநாளா இது மழைநாளா
மயிலினம் தோகை விரிப்பதென்ன
அது மோகன நாடகம் நடிப்பதென்ன
மோகன நாடகம் நடிப்பதென்ன

பெண் : பிரியசகியே பிரியசகியே
மழைநாளா இது மழைநாளா
மயிலினம் தோகை விரிப்பதென்ன
அது மோகன நாடகம் நடிப்பதென்ன

பெண் : நல்ல சகுனம்
இது நல்ல சகுனம்
ஒரு நாயகன் வரக்கூடும்
உங்க வாய் வெளுக்க
இரு விழி சிவக்க
காதல் நோய் தனை தரக்கூடும்
ஆஆ…..ஆஆஆ…….ஆஆஆ…….

பெண் : யாரடி அவன் யாரடி
வீராதி வீரனோ கூறடி
சூராதி சூரனோ கூறடி
இந்த அல்லியை… ஜாதி மல்லியை
இன்பவல்லியை…. உயிர்கொல்லியை
வெல்லத் தகுந்தவனோ
ஏழு வண்ணம் மிகுந்தவனோ
யாரடி…. யாரடி

ஆண் : அவையிளிருக்கும்
அத்தனை பேருக்கும்
வணக்கம் வணக்கம் வணக்கம்
என் வணக்கத்திலே தான்
தமிழ் மணக்கும்

ஆண் : பஞ்ச பாண்டவர் அஞ்சு பேர்களிலே
நடுவினில் நான் பிறந்தேன்
அர்ஜுனன் என்பது என் பேரு
இரத்தினபுரி தான் என் ஊரு

ஆண் : கண்ணா கண்ணா
ஏன் அழைத்தாய்
என்னை ஏன் அழைத்தாய்
அர்ஜுனனே என் ஆருயிர் தோழா…

ஆண் : மதுரையை ஆள்கிற அல்லி
என் மனதை எடுத்தாலே கள்ளி
என் உள்ளத்தை ஒட்டிய பல்லி
அவளை ஒடுக்கனும் படுக்கையில் துள்ளி

ஆண் : இந்த சமையத்தில்
நீ உதவனும் கண்ணா
எங்கள சேத்து நீ வைக்கணும் ஒண்ணா

ஆண் : நான் பாமாவுக்குத்தாண்டா மாமா
அதை நீ மறக்காதே ஆமா

ஆண் : உன்னை விட்டால் எனக்கு யாரு
உதவி செய்வார் கூறு

ஆண் : நான் மார்க்கங்கள் சொல்வேன் கேளு
மணமாலையை தாங்கும் உன் தோளு

பெண் : நான் அன்னதூவியில் அயந்திருக்க
என் மணிக்கழுத்தில் தாலி
கட்டலாமா கட்டலாமா

ஆண் : {என் மேல குத்தமில்ல
உன்ன கண்ட முதலா
என் நெஞ்சு சுத்தமல்ல} (2)

பெண் : நீ போட்டது எத்தனை வேடமடா
குந்தி புத்திரனாய் வந்த மூடமடா
வீரன் என்றால் நீ வில்லெடு
இந்த பூவையின் மேலே போர் தொடு

ஆண் : ஆ… ஆ…ஆஆ….ஆஆ…..
நெஞ்சு பொறுக்குதில்லையே
நெஞ்சு பொறுக்குதில்லையே

ஆண் : நாம் தாயால் பிறந்தோம்
குழு : பிறந்தோம்
ஆண் : தமிழால் வளர்ந்தோம்
குழு : வளர்ந்தோம்

ஆண் : தாயும் தமிழும் பெண்தானே
இரண்டும் இரண்டு கண்தானே
குழு : தாயும் தமிழும் பெண்தானே
இரண்டும் இரண்டு கண்தானே

ஆண் : பரங்கியர்க்கு
பாரத தாய் தான் அடிமையாவதா
அவள் கைவிலங்காலும் கால் விலங்காலும்
நாளும் நோவதா

ஆண் : விடுதலை வேள்வியில் கொடுதலை
வெள்ளையன் செய்வானோ சுடுதலை
மக்களுக்கில்லை சூடு
இது மாபெரும் மானக்கேடு

குழு : எங்கே போகும் நாடு
இது நாமிருக்கும் தாய் வீடு
நெஞ்சு பொறுக்குதில்லையே
நெஞ்சு பொறுக்குதில்லையே…

Leave a Comment