in Tik Tik Tik
பாடகி : எஸ். ஜானகி
இசையமைப்பாளர் : இளையராஜா
பெண் : { இது ஒரு நிலாக்காலம்
இரவுகள் கனா காணும் } (2)
ஆடை கூட பாரமாகும்
ஏ பாரிஜாதம் ஈரமாகும்
இம்மலையே வசந்த வானம்
பறவையே வருகவே
பெண் : இது ஒரு
நிலாக்காலம்
இரவுகள் கனா
காணும்
குழு : ……………………….
பெண் : { பாவைக் கண்டாலே
நிலவு நெளியாதோ அழகைப்
பார்த்தாலே ஓஹோ
அருவி நிமிராதோ } (2)
பெண் : வண்டு வந்து
உடைக்காத பூவும் நீயே
ஓஹோ யாரும் வந்து
நடக்காத சாலை நீயே
உள்ளங்கையில் சொர்க்கம்
வந்து உறங்க கண்டாளே
பெண் : இது ஒரு
நிலாக்காலம்
இரவுகள் கனா
காணும்
பெண் : { தங்க தேகங்கள்
துள்ளி ஆடாதோ ராஜ
மேகங்கள் ஓஹோ
பூவைத் தூவாதோ } (2)
பெண் : கண்ணாடி
உனைக் கண்டு
கண்கள் கூசும்
ஓஹோ வானவில்லும்
நகச்சாயம் வந்து பூசும்
ஓஹோ பருவப் பூக்கள்
புருவம் அசைத்தால்
பூமி சுற்றாது
பெண் : இது ஒரு நிலாக்காலம்
இரவுகள் கனா காணும்
ஆடை கூட பாரமாகும்
ஏ பாரிஜாதம் ஈரமாகும்
இம்மலையே வசந்த வானம்
பறவையே வருகவே
பெண் : இது ஒரு
நிலாக்காலம்
இரவுகள் கனா
காணும்