Adheeraa Song Lyrics

in Cobra

பாடகர் : வகு மழன்

இசையமைப்பாளர் : ஏ. ஆர். ரஹ்மான்

பாடலாசிரியர் : பா விஜய்

பெண் : தீரா தீராதி தீரா
துப்பாக்கி மந்திரா
சமர் செய்யும் சந்திரா
யுகம் வெல்ல வந்தீரா

பெண் : ஓரா ஓராயிரம் புதிரா
அணு உலையின் உதிரா
மின் காந்த கதிரா
தீராதி தீரா

பெண் : இவன் தோட்டக்கள் விளையாட்டில்
ஜெயிப்பதே விதியாகும்
இவன் தோட்டத்தில் துப்பாக்கி
செடிகள் பூவாகும்

ஆண் : அதீரா அதீரா
உன் ரூபம் பல நூறா
ஒரு மூச்சில் ஆளை அள்ளும்
எதையும் வெல்லும் கோப்ரா

ஆண் : ஹே சூரா ஹே சூரா
அடங்காத அதிகாரா
ஒரு மூச்சில் ஆளை அள்ளும்
எதையும் வெல்லும் கோப்ரா

ராப் : கி புல் அப் ஆன் த சீன்
கால்குலேட்டிங் திங்ஸ் யு கேட் னெவர் திங்
இவாலுயேட்டிங் கீஸ் டு ஆல் த பீஸ்
பிகாஸ் கி பி வெய்டிங்
இயர்ஸ் ஃபார் ஆல் த ஈஸி

ராப் : ஸோ லெட் மி டெல் யு
ஒய் தே
ஆல்வேஸ் கால் கிம் கோப்ரா
கில்லர் இன்ஸ்டிக்ட்ஸ்
அன்ட் கி டோன்ட் னீட் னோ லவ்
கி வில் ஆல்வேஸ் ஸ்லைடு இன்
சைலன்ஸ் டில் இட்ஸ் ஓவர்
னாட் ஏ மேன் ஆஃப் வயலன்ஸ்
பட் கி னெவர் னீட் டு
லுக் ஓவர் கிஸ் ஷோல்டர்
கோ கோ கோப்ரா

பெண் : நீ ஒருவன் அல்ல இருவன்
அந்த இருவன் இங்கே ஒருவன்
உன் இருவரில் நல்லவன் ஒருவன்
அதை மீறிய வல்லவன் ஒருவன்

பெண் : உன் உள்ளே இருப்பவன் மனிதன்
அவன் உள்ளே இன்னொரு கனிதன்
உன் மனிதம் உன்னை சொல்லும்
உன் கனிதம் உலகை வெல்லும்

பெண் : பெரும் வெற்றிகளை பெற்றவனின்
இதயம் ஆடாது
மலை மேல் உள்ள சிகரங்கள்
மகுடம் சூடாது

ஆண் : அதீரா அதீரா
உன் ரூபம் பல நூறா
ஒரு மூச்சில் ஆளை அள்ளும்
எதையும் வெல்லும் கோப்ரா

ஆண் : ஹே சூரா ஹே சூரா
அடங்காத அதிகாரா
ஒரு மூச்சில் ஆளை அள்ளும்
எதையும் வெல்லும் கோப்ரா

பெண் : ஓராயிரம் யானையின் கூட்டம்
ஒரு புலியின் யுக்தி தட்டும்
நூறாயிரம் சேனை வட்டம்
ஒரு அறிவின் தீப்பொறி எட்டும்

பெண் : அட நேர்மை என்றால் மட்டும்
பல கைகள் இங்கே தட்டும்
நேர் நிற்கும் மரங்களை மட்டும்
அந்த கைகள் வந்து வெட்டும்

பெண் : இவன் கோட்டைக்குள் கிடையாது
நியாய சட்டங்கள்
பின் வாங்காது வீழாது
இவனின் திட்டங்கள்

ஆண் : அதீரா அதீரா
உன் ரூபம் பல நூறா
ஒரு மூச்சில் ஆளை அள்ளும்
எதையும் வெல்லும் கோப்ரா

ஆண் : ஹே சூரா ஹே சூரா
அடங்காத அதிகாரா
ஒரு மூச்சில் ஆளை அள்ளும்
எதையும் வெல்லும் கோப்ரா

ராப் : கி புல் அப் ஆன் த சீன்
கால்குலேட்டிங் திங்ஸ் யு கேட் னெவர் திங்
இவாலுயேட்டிங் கீஸ் டு ஆல் த பீஸ்
பிகாஸ் கி பி வெய்டிங்
இயர்ஸ் ஃபார் ஆல் த ஈஸி
கோ கோ கோப்ரா

Leave a Comment