in Cobra
பாடகர் : சர்தக் கல்யாணி
இசை அமைப்பாளர் : ஏ. ஆர். ரகுமான்
பாடல் ஆசிரியர் : தாமரை
ஆண் : {தரங்கினி தரங்கினி
கிணிணி கினி கினி
தரங்கினி தரங்கினி
தரண ணா தரங்கினி} (2)
ஆண் : தரங்கினி தரங்கினி
தனிமையில் விடாதவள் இவள்
கனவிலும் நினைவிலும்
இடைவெளி தராதவள் இவளே
இனிமையின் இன்னோர் துகளே
ஆண் : முதல் முதல் உணரும் அன்பால்
மூழ்கிவிட தோன்றும் பெண்பால்
அழகி என் அருகில் வந்தாள்
ஆறறிவும் தேயும் தன்னால்
புதையலே பூமியை கீறி
தேடி வரும் முன்னால்
ஆண் : அனல்மேலே பனியாய் உருகி உருகி
கரையும் எனது மனம் உருகி உருகி
இருந்தாலும் இதுவே மருகி மருகி
தொடரும் அடிமனதில் மருகி மருகி
ஆண் : கலங்கரை விளக்காய் வந்தாள்
காரிருளில் தூணாய் நின்றாள்
மயிலிறகு பார்வை கொண்டாள்
மாமழையும் தானே தந்தாள்
ஆண் : தரங்கினி தரங்கினி
கிணிணி கினி கினி
தரங்கினி தரங்கினி
தரண ணா தரங்கினி
ஆண் : தினம் தினம் உன்னை திருடி செல்ல
விழித்திருந்தேன் விடியல் வரை
கனவுகள் என்னும் வலை விரித்தேன்
அதுவல்லவோ விமல சிறை
ஆண் : கடிகாரம் வீணாய் எதற்கு நமக்கு
உயிரில் விரலால் நீ கீற
புரளும் நதியாய் நான் மீற
போ என்று நானே சொன்னாலும் போகாதே நீ
ஆண் : தரங்கினி தரங்கினி
கிணிணி கினி கினி
தரங்கினி தரங்கினி
தரண ணா தரங்கினி
ஆண் : முதல் முதல் உணரும் அன்பால்
மூழ்கிவிட தோன்றும் பெண்பால்
அழகி என் அருகில் வந்தாள்
ஆறறிவும் தேயும் தன்னால்
புதையலே பூமியை கீறி
தேடி வரும் முன்னால்
ஆண் : அனல்மேலே பனியாய் உருகி உருகி
கரையும் எனது மனம் உருகி உருகி
இருந்தாலும் இதுவே மருகி மருகி
தொடரும் அடிமனதில் மருகி மருகி
ஆண் : {தரங்கினி தரங்கினி
கிணிணி கினி கினி
தரங்கினி தரங்கினி
தரண ணா தரங்கினி} (2)