in Cobra
தமிழ்
பாடகர் : ஏ. ஆர். ரகுமான்
இசை அமைப்பாளர் : ஏ. ஆர். ரகுமான்
பாடல் ஆசிரியர் : தாமரை
ஆண் : {நீ இங்கே இல்லை
என்றால் நான் இல்லை} (2)
ஆண் : உயிர் உருகுதே
மனம் கரையுதே
எனது வானே
ஆண் : ஒரு முறை தான்
பார்த்தேன் உன்னை உன்னை
பரவசத்தால் பதில் உரைக்க
மறந்து விட்டேன்
நினைவினிலேனோ வந்தாள் அன்னை
ஆண் : நீ இங்கே இல்லை
என்றால் நான் இல்லை
ஆண் : மேற்கே உன் சாரல் மழை
வா வா வந்தென்னை நனை
யாரும் முன் சொல்லா கதை
இன்பம் போல் தோன்றும் வதை
ஆண் : கண்டேன் என் மாயாவி மானை
என் ரீங்கார வீணை
நீ நான் செய்யும் ஆராதனை
ஆண் : {நீ இங்கே இல்லை
என்றால் நான் இல்லை} (2)
ஆண் : பாயும் உன் கார் கூந்தலில்
என்னை ஏன் நீ ஏந்தினாய்
மண்ணில் நான் வீழும் முன்னே
என்னை நீ தான் தாங்கினாய்
ஆண் : ஊஞ்சல் போல் தாலாட்டும் தோளில்
நான் சாய்ந்தாடும் நாளில்
ஏன் லேசாக நீ தேம்பினாய்
ஆண் : உயிர் உருகுதே
மனம் கரையுதே
எனது வானே
ஆண் : ஒரு முறை தான்
பார்த்தேன் உன்னை உன்னை
ஆண் : பரவசத்தால் பதில் உரைக்க
மறந்து விட்டேன்
பாவை முன்னே முன்னே
பனியாய் கரைந்து விட்டேன்
ஆண் : {நீ இங்கே இல்லை
என்றால் நான் இல்லை} (2)