Yele Ilanchingamey Song Lyrics

in Cobra

பாடகி : ரக்ஷிதா சுரேஷ்

இசை அமைப்பாளர் : ஏ. ஆர். ரகுமான்

பாடல் ஆசிரியர்  : பா. விஜய்

பெண் : ஏலே எளஞ்சிங்கமே
என் சாமி நெஞ்சமே ஓ ஆரிராரோ
ஏலே எளஞ்சிங்கமே
என் சாமி நெஞ்சமே
உன் கூடவே நான் இருப்பேன்
கூரயா காத்து நிப்பேன் சோகம் அண்டாம

பெண் : அந்த ஆகாச வீதியில
சூரிய யானையில
ஊர்கோலம் போக போறேன்
ஊரெல்லாம் ஆளப்போறேன் இருளே இல்லாம

பெண் : புதுசா ஒரு பூமி
உனக்குண்டு சாமி
தாலாட்டும் தாய் மடியா தாங்க வருவேன்
அன்புக்குள் பொத்தி வைக்க
எனயே நீ மறக்க
தேவத கூட்டம் உன்ன தேடி வரும்

பெண் : ஏலே எளஞ்சிங்கமே
என் சாமி நெஞ்சமே
உன் கூடவே நான் இருப்பேன்
கூரயா காத்து நிப்பேன் சோகம் அண்டாம

பெண் : காலமே மாறுமே
காயமும் மாறுமே
திசை எல்லாம் விடியுமே
எதுவுமே முடியும் முடியுமே

பெண் : போகும் வழி நிழல் போல
கண்ணுக்கு மேல் இமை போல
வழி துணையா வருவேன் நானே

பெண் : ஏலே ஏலே எளஞ்சிங்கமே
என் சாமி நெஞ்சமே
உன் கூடவே நான் இருப்பேன்
கூரயா காத்து நிப்பேன் சோகம் அண்டாம

பெண் : அந்த ஆகாச வீதியில
சூரிய யானையில
ஊர்கோலம் போக போறேன்
ஊரெல்லாம் ஆளப்போறேன் இருளே இல்லாம

Leave a Comment