Aasaiya Kaathula Thoothu Vittu Song Lyrics

in Johnny

பாடகி : எஸ்.பி. சைலஜா

இசையமைப்பாளர் : இளையராஜா

பெண் : ஆசைய காத்துல
தூது விட்டு ஆடிய பூவுல
வாடை பட்டு சேதிய
கேட்டொரு ஜாடை தொட்டு
பாடுது பாட்டு ஒன்னு
குயில் கேட்குது பாட்டை
நின்னு

பெண் : ஆசைய காத்துல
தூது விட்டு ஆடிய பூவுல
வாடை பட்டு

பெண் : வாசம் பூவாசம்
வாலிப காலத்து நேசம்
மாசம் தை மாசம் மல்லிகை
பூ மனம் வீசும்

பெண் : நேசத்துல வந்த
வாசத்துல நெஞ்சம் பாடுது
ஜோடிய தேடுது பிஞ்சும்
வாடுது வாடையில
கொஞ்சும் ஜாடைய போடுது
பார்வையில் சொந்தம் தேடுது
மேடையில

பெண் : ஆசைய காத்துல
தூது விட்டு ஆடிய பூவுல
வாடை பட்டு

பெண் : தேனு பூந்தேனு
தேன்துளி கேட்டது நானு
மானு பொன்மானு தேயில
தோட்டத்து மானு

பெண் : ஓடி வர
உன்னை தேடி வர
தாழம் பூவுல தாவுற
காத்துல தாகம் ஏறுது
ஆசையில பாக்கும்
போதுல ஏக்கம் தீரல
தேகம் வாடுது பேசையில

பெண் : ஆசைய காத்துல
தூது விட்டு ஆடிய பூவுல
வாடை பட்டு சேதிய
கேட்டொரு ஜாடை தொட்டு
பாடுது பாட்டு ஒன்னு
குயில் கேட்குது பாட்டை
நின்னு பாடுது பாட்டு ஒன்னு
குயில் கேட்குது பாட்டை
நின்னு

Leave a Comment