Oh Raaya Song Lyrics

in Raayan

பாடகர்கள் : ஏ. ஆர். ரகுமான் மற்றும் காணவ்யா துரைஸ்வாமி

இசை அமைப்பாளர் : ஏ. ஆர். ரகுமான்

பாடல் ஆசிரியர் : தனுஷ்

பெண் : போகுற பாதை தெரியலையே
யார் தந்த விதியோ
தூரத்தில் வரும் வெளிச்சம் எல்லாம்
நீ செல்லும் வழியோ

பெண் : இங்க பறந்து கெடக்கும் பூமி
உனக்கும் தந்ததையா
இங்கு இருக்கும் அத்தன சாமியும்
உனக்கும் சொந்தமையா

பெண் : உன் கவலை எல்லாம்
உன் கவலை எல்லாம்
தூசா பறக்கட்டும் ராசா
இனி உனக்குன்னு ஒரு காலம்
பொறக்கட்டும் ராசா

ஆண் : ஓ ராயா..(4)

பெண் : ஓ குருவியே
பாட்டு சொல்ல வருவியா
ஓ அருவியே
தூங்க வைக்க வருவியா

பெண் : சிறகுகள் முளைக்கும் முன்னே
பறக்கணும் கண்ணே
பறக்குற திசை எல்லாம்
ஜெயிக்கணும் கண்ணே

பெண் : காணும் கனவு எல்லாம்
உள்ளங்கையில் வரும்
வானமே மண்ணில் வரும்
கண்ணே கண்ணே

பெண் : ஊரும் உறவும் இல்ல
யாரும் துணையும் இல்ல
வேர்வதான் கூட வரும்
கண்ணே கண்ணே

பெண் : {தோல் இரண்ட கல்லாக்கு
முதுகெலும்ப வில்லாக்கு
கால்கள்தான் உன் பல்லாக்கு… ஓ ராயா} (2)

ஆண் : ஓ ராயா..(4)

முனங்கல் : ………..

ஆண் : ஓ ராயா..(4)

Leave a Comment