Aasai Nenjil Ini Deepam Song Lyrics

in Bhagavathipuram Railway Gate

பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமணியம்

இசையமைப்பாளர் : இளையராஜா

ஆண் : ஆசை நெஞ்சில் இனி தீபம் இல்லை
பூசையில்லை இங்கு தேவி இல்லை
ஆகாது பெண்ணின் உள்ளம்
ஆழம் காண யாரால் ஆகும்
ஆகாது பெண்ணின் உள்ளம்
ஆழம் காண யாரால் ஆகும்
ஆற்றங்கரை கனவு கண்ணில்
ஆராரோரோ ஆயிரம்தானோ…….

ஆண் : ஆசை நெஞ்சில் இனி தீபம் இல்லை
பூசையில்லை இங்கு தேவி இல்லை

ஆண் : நீ சூடும் பூவும் பொட்டும்
காதல் செய்த பாவம்
நான் பாடும் பாடல் கேட்டு
யாருக்கென்ன லாபம்
கண்ணால் ஜாடை முன்னாலேயே
சொன்னால் கூட போதாதோ…ஆ….ஆ….ஆ…..

ஆண் : நீ சூடும் பூவும் பொட்டும்
காதல் செய்த பாவம்
நான் பாடும் பாடல் கேட்டு
யாருக்கென்ன லாபம்
கண்ணால் ஜாடை முன்னாலேயே
சொன்னால் கூட போதாதோ…

ஆண் : நீயாக தேடி வந்து
தீயாக நெஞ்சில் நின்று
பொன்னா என்று என்னை
சுட்டுப் பார்த்தாய்

ஆண் : ஆசை நெஞ்சில் இனி தீபம் இல்லை
பூசையில்லை இங்கு தேவி இல்லை

ஆண் : கல்யாண கோலம் கண்டேன்
காலில் மெட்டி தாளம்
நல்வாழ்த்து பாட வந்தேன்
கண்ணில் என்ன ஈரம்
ஏதோ ஏழு ஜென்மம் உண்டாம்
நாமும் ஒன்று சேர்வோமே…..ஆ…ஆ…..

ஆண் : கல்யாண கோலம் கண்டேன்
காலில் மெட்டி தாளம்
நல்வாழ்த்து பாட வந்தேன்
கண்ணில் என்ன ஈரம்
ஏதோ ஏழு ஜென்மம் உண்டாம்
நாமும் ஒன்று சேர்வோமே…..

ஆண் : நீ பார்த்த பார்வை நெஞ்சில்
பால் வார்க்கும்போதும்
மிஞ்சும் வாழ்நாள் என்றும்
நீதான் என்றே வாழ்வேன் நான்……

ஆண் : ஆசை நெஞ்சில் இனி தீபம் இல்லை
பூசையில்லை இங்கு தேவி இல்லை
ஆகாது பெண்ணின் உள்ளம்
ஆழம் காண யாரால் ஆகும்
ஆகாது பெண்ணின் உள்ளம்
ஆழம் காண யாரால் ஆகும்
ஆற்றங்கரை கனவு கண்ணில்
ஆராரோரோ ஆயிரம்தானோ…….

ஆண் : ஆசை நெஞ்சில் இனி தீபம் இல்லை
பூசையில்லை இங்கு தேவி இல்லை

Leave a Comment