in Bhagavathipuram Railway Gate
பாடகர்கள் : எஸ். பி. சைலஜா மற்றும் தீபன் சக்கரவர்த்தி
இசையமைப்பாளர் : இளையராஜா
பெண் : காலை நேரக் காற்றே வாழ்த்திச் செல்லு
மாலை சூடும் நாளை பார்த்துச் சொல்லு
காதல் தீபம் கண்ணில் ஏற்றி ஏற்றி
தாகம் தீரும் நேரம் சேவல் கூவும்
பெண் : காலை நேரக் காற்றே வாழ்த்திச் செல்லு
மாலை சூடும் நாளை பார்த்துச் சொல்லு
ஆண் : நடந்தால் காவேரி நீ நகைத்தால் ஸ்ரீதேவி தான்
பெண் : மொழியே தேவாரமோ விழிமேல் பாமாலையோ
ஆண் : கனவாய் நீ ஆனால் இமையால் நான் பூட்டுவேன்
பெண் : மனமே நீ ஆனா மணித்தேர் நான் ஓட்டுவேன்
ஆண் : கன்னித்தேரில் சாமரம் வீசும்
பின்னல் மீதும் பூவின வாசம்
பெண் : பொதிகை தமிழில் கவிதை பொழியும்
பாரதி தோழனோ
ஆண் : காலை நேரக் காற்றே
பெண் : வாழ்த்திச் செல்லு…..
ஆண் : மாலை சூடும் நாளை
பெண் : பார்த்துச் சொல்லு
காதல் தீபம் கண்ணில் ஏற்றி ஏற்றி
தாகம் தீரும் நேரம் சேவல் கூவும்
ஆண் : காலை நேரக் காற்றே
பெண் : வாழ்த்திச் செல்லு…..
ஆண் : மாலை சூடும் நாளை
பெண் : பார்த்துச் சொல்லு
பெண் : மடித்தேர் ராஜாங்கமே கிடைத்தால் மாமாங்கமே
ஆண் : மலைத்தேன் மேலோங்கவே
இளைத்தேன் நான் ஏங்கியே
பெண் : கனிவாய் தேனாற்றில் ஒரு நாள் நீராட்டுவாய்
ஆண் : இதழாம் தீரத்தில் மறுநாள் பாராட்டுவேன்
பெண் : அந்தி வானில் குங்கும சேலை
தந்த மேக சங்கம மாலை
ஆண் : நயன மலரின் சயன அறையில்
நாயன ஓசையோ
பெண் : காலை நேரக் காற்றே
ஆண் : வாழ்த்திச் செல்லு…..
பெண் : மாலை சூடும் நாளை
ஆண் : பார்த்துச் சொல்லு
காதல் தீபம் கண்ணில் ஏற்றி ஏற்றி
தாகம் தீரும் நேரம் சேவல் கூவும்
பெண் : காலை நேரக் காற்றே
ஆண் : வாழ்த்திச் செல்லு…..
பெண் : மாலை சூடும் நாளை
ஆண் : பார்த்துச் சொல்லு