En Kanmani Un Kadhali Song Lyrics

in Chittu Kuruvi

பாடகி : பி.சுஷீலா

பாடகர் : எஸ்.பி. பாலசுப்ரமணியம்

இசையமைப்பாளர் : இளையராஜா

ஆண் : என் கண்மணி
உன் காதலி இள
மாங்கனி உன்னை
பார்த்ததும் சிரிக்கின்றதேன்
சிரிக்கின்றதேன் நான் சொன்ன
ஜோக்கை கேட்டு நாணமோ
நீ நகைச்சுவை மன்னனில்லையோ

ஆண் : நன்னா
சொன்னேள்
போங்கோ

பெண் : என் மன்னவன்
உன் காதலன் எனை
பார்த்ததும் ஓராயிரம்
கதை சொல்கிறான்
கதை சொல்கிறான்
அம்மம்மா இன்னும்
கேட்க தூண்டுமோ
நீ ரசிக்கின்ற
கன்னியில்லையோ

ஆண் : என் கண்மணி

ஆண் : இருமான்கள்
பேசும்போது மொழியேதம்மா
பிறர் காதில் கேட்பதற்கும்
வழியேதம்மா

பெண் : ஒரு ஜோடி
சேர்ந்து செல்லும்
பயணங்களில் உறவன்றி
வேறு இல்லை கவனங்களில்

ஆண் : இளமா மயில்
பெண் : அருகாமையில்

ஆண் : வந்தாடும் வேலை
இன்பம் கோடி என்று
அனுபவம் சொல்ல
வில்லையோ

ஆண் : இந்தாமா
கருவாட்டு கூடை
முன்னாடி போ

பெண் : என் மன்னவன்
உன் காதலன் எனை
பார்த்ததும் ஓராயிரம்
கதை சொல்கிறான்
கதை சொல்கிறான்
அம்மம்மா இன்னும்
கேட்க தூண்டுமோ
நீ ரசிக்கின்ற
கன்னியில்லையோ

ஆண் : என் கண்மணி

ஆண் : தேனாம்பேட்டை
சூப்பர் மார்க்கெட் இறங்கு

ஆண் : மெதுவாக
உன்னை கொஞ்சம்
தொட வேண்டுமே
திருமேனி எங்கும்
விரல்கள் படவேண்டுமே

பெண் : அதற்கான
நேரம் ஒன்று வர
வேண்டுமே அடையாள
சின்னம் ஒன்று தர வேண்டுமே

ஆண் : இரு தோளிலும்
மணமாலைகள்

பெண் : கொண்டாடும்
காலமொன்று கூடுமென்று
தவிக்கின்ற தவிப்பென்னவோ

ஆண் : என் கண்மணி
உன் காதலி இள
மாங்கனி உன்னை
பார்த்ததும் சிரிக்கின்றதேன்
சிரிக்கின்றதேன் நான் சொன்ன
ஜோக்கை கேட்டு நாணமோ
நீ நகைச்சுவை மன்னனில்லையோ

பெண் : என் மன்னவன்
உன் காதலன் எனை
பார்த்ததும் ஓராயிரம்
கதை சொல்கிறான்
கதை சொல்கிறான்
அம்மம்மா இன்னும்
கேட்க தூண்டுமோ
நீ ரசிக்கின்ற
கன்னியில்லையோ

ஆண் : என் கண்மணி

Leave a Comment