Mega Deepam Song Lyrics

in Aagaya Gangai

பாடகர் : மலேசியா வாசுதேவன்

இசையமைப்பாளர் : இளையராஜா

ஆண் : மேக தீபம் சூடும் மாலை
அவள் நெஞ்சின் அனுராக கவிதை

ஆண் : மேக தீபம் சூடும் மாலை
அவள் நெஞ்சின் அனுராக கவிதை
ஆயிரம் பொன்னூஞ்சல்
ஆடிடும் என் நெஞ்சில்

ஆண் : மேக தீபம் சூடும் மாலை
அவள் நெஞ்சின் அனுராக கவிதை

ஆண் : முத்துக்கடல் அலை சத்தம்
அவளும் முத்தக் குவியலின் மொத்தம்
முத்துக்கடல் அலை சத்தம்
அவளும் முத்தக் குவியலின் மொத்தம்

ஆண் : அஞ்சும் இள நெஞ்சம்
தஞ்சம் மலர் மஞ்சம்
அஞ்சும் இள நெஞ்சம்
தஞ்சம் மலர் மஞ்சம்

ஆண் : கனவு முகம் தினம்
மலரும் கரங்களில் வரம் தரும்
கனவு முகம் தினம்
மலரும் கரங்களில் வரம் தரும்
புதிய உதய நதியை இதயம் அழைத்தது
எதிலும் புனித இனிமை பெருகுதே

ஆண் : மேக தீபம் சூடும் மாலை
அவள் நெஞ்சின் அனுராக கவிதை

ஆண் : கங்கை சுகம் தரும் மங்கை
இதழின் உன்கைத்
தொடும் மலர்ச்செங்கை
கங்கை சுகம் தரும் மங்கை
இதழின் உன்கைத்
தொடும் மலர்ச்செங்கை

ஆண் : சிந்தும் சுக சந்தம்
சொந்தம் உயிர் பந்தம்
சிந்தும் சுக சந்தம்
சொந்தம் உயிர் பந்தம்

ஆண் : துணையுடனே இரவு வரும்
தினம் தினம் சுகம் தரும்
துணையுடனே இரவு வரும்
தினம் தினம் சுகம் தரும்
மயங்க மயங்க மலர்ந்த
நினைவு வளர்ந்தது
மனதில் அழகு வடிவம் சிரித்ததே

ஆண் : மேக தீபம் சூடும் மாலை
அவள் நெஞ்சின் அனுராக கவிதை
ஆயிரம் பொன்னூஞ்சல்
ஆடிடும் என் நெஞ்சில்

ஆண் : மேக தீபம் சூடும் மாலை
அவள் நெஞ்சின் அனுராக கவிதை

Leave a Comment