Vaadi Samanja Song Lyrics

in Gopurangal Saivathillai

தமிழ்

பாடகி : பி. சுசீலா

இசையமைப்பாளர் : இளையராஜா

குழு : வா வா வா வா வாடி

பெண் : வாடி சமஞ்ச புள்ள
அடி வெளஞ்ச கரும்புக் கொல்ல

குழு : வாடி சமஞ்ச புள்ள
அடி வெளஞ்ச கரும்புக் கொல்ல

பெண் : எலி வாலு போல
சடை எம்புதடி மேலே

குழு : எலி வாலு போல
சடை எம்புதடி மேலே

பெண் : உன்ன எந்த பையன்
கட்டிக்குவான்டி

குழு : வாடி சமஞ்ச புள்ள
அடி வெளஞ்ச கரும்புக் கொல்ல

பெண் : சீவி சிடுக்கெடுத்து
குழு : நீ சிங்காரம் பண்ணிக்கடி
ராணி ரதியாட்டமா
உன்ன நீயேதான் எண்ணிக்கடி

பெண் : எவதான் பெத்தாளோ
இந்த ஒடம்ப
எதுக்கும் ஆகாத தென்னங்குரும்ப
தோள்ள விழுந்த
குழு : தோண்டி உனக்கு
பெண் : கொள்ள நெனப்பு
குழு : ஏன்டி உனக்கு

பெண் : அடியே அசடு
அடியே அசடு
கண்டபடி திட்டபோறேன்

குழு : வாடி சமஞ்ச புள்ள
அடி வெளஞ்ச கரும்புக் கொல்ல
எலி வாலு போல
சடை எம்புதடி மேலே
உன்ன எந்த பையன்
கட்டிக்குவான்டி

பெண் : வானத்திலே போகுது பார்
மச்சான் வூட்டு ஏரோப்ளேன்

பெண் : மாலையோட மரிக்கொழுந்தே
உன்ன மேகத்திலே தேடிப்போறான்

பெண் : ராசா நெனப்புலதான்
நீ ராத்திரி படுத்துக்கடி

பெண் : காதல் கல்யாணத்த
நீ கனவுல முடிச்சுக்கடி
ராசா நெனப்புலதான்
நீ ராத்திரி படுத்துக்கடி
காதல் கல்யாணத்த
நீ கனவுல முடிச்சுக்கடி

குழு : உறவும் ஊராரும் சுத்தி இருக்க
வருவான் சப்பாணி உன்ன மணக்க

பெண் : என்ன தெரியும்
குழு : கேணி தவளை
பெண் : ஏன்டி உனக்கு
குழு : தாலி கவலை

பெண் : அடியே அசடு
அடியே அசடு

பெண் : கண்டபடி திட்டபோறேன்

குழு : வாடி சமஞ்ச புள்ள
அடி வெளஞ்ச கரும்புக் கொல்ல
எலி வாலு போல
சடை எம்புதடி மேலே
உன்ன எந்த பையன்
கட்டிக்குவான்டி
வாடி சமஞ்ச புள்ள
அடி வெளஞ்ச கரும்புக் கொல்ல

Leave a Comment