Ada Puthiyathu Piranthadhu Song Lyrics

in Thevar Magan

பாடகர் : மலேசியா வாசுதேவன்

இசையமைப்பாளர் : இளையராஜா

குழு : தந்தானே தந்தானே
தானதந்த தந்தானே
தானா தானத்தந்தினானா….ஆஅ
தந்தானே தந்தானே
தானதந்த தந்தானே
தானா தானத்தந்தினா….

ஆண் : அட புதியது பிறந்தது
பழையது ஒதுங்குது
ஹர ஹர சிவ சிவ
பழைய பரமசிவமே
அட பைத்தியம் தெளிஞ்சது
வைத்தியம் பளிச்சது
ஹர ஹர சிவ சிவ
பழைய பரமசிவமே

ஆண் : ஒண்ணாச்சு பாரு
இதுவரை ரெண்டான ஊரு
அண்ணாச்சி மூளை முடிச்சது
பொன்னான வேலை
அட வீராப்பும் பொல்லாப்பும்
பொய்யா போச்சு அம்மம்மா…

குழு : அட புதியது பிறந்தது
பழையது ஒதுங்குது
ஹர ஹர சிவ சிவ
பழைய பரமசிவமே…..
அட பைத்தியம் தெளிஞ்சது
வைத்தியம் பளிச்சது
ஹர ஹர சிவ சிவ
பழைய பரமசிவமே

ஆண் : ஹேய் கூடாம நம்மத்தான் கூரு கட்டி
சிலர் கோளாறு செஞ்சாங்க வேலி கட்டி
ஆத்தாடி அண்ணன்தான் தோளு தட்டி
அதை சாய்ச்சாரு மண்ணுல வாளில் வெட்டி

ஆண் : உள்ளத் துணிவு உள்ளவரு
ஊருக்குதவும் நம்மவரு

ஆண் : வாத்தியத்த தொட்டுத்தான்
குழு : கொட்டுத்தான் கொட்டுத்தான்
ஆண் : ஓசையெல்லாம் எட்டெட்டும்
குழு : திக்கெட்டும் எட்டெட்டும்
ஆண் : அடி அம்மாடி எல்லோரும்
ஆட்டம் போடும் நாள்தானோ

ஆண் : அட புதியது பிறந்தது
பழையது ஒதுங்குது
ஹர ஹர சிவ சிவ
பழைய பரமசிவமே
அட பைத்தியம் தெளிஞ்சது
வைத்தியம் பளிச்சது
ஹர ஹர சிவ சிவ
பழைய பரமசிவமே

ஆண் : ஒண்ணாச்சு பாரு
இதுவரை ரெண்டான ஊரு
அண்ணாச்சி மூளை முடிச்சது
பொன்னான வேலை
அட வீராப்பும் பொல்லாப்பும்
பொய்யா போச்சு அம்மம்மா…

குழு : அட புதியது பிறந்தது
பழையது ஒதுங்குது
ஹர ஹர சிவ சிவ
பழைய பரமசிவமே
அட பைத்தியம் தெளிஞ்சது
வைத்தியம் பளிச்சது
ஹர ஹர சிவ சிவ
பழைய பரமசிவமே
ஆண் : ஹே ஹே

குழு : அற்புதமா அதிசயமா பூத்திருக்கு
முத்து நகை
ரத்தினமா கெடைச்சிருக்கு
நிச்சயமா நம் பெருமை
காத்திருக்கும் பத்திரமா
சக்தியவ துணையிருப்பா

ஆண் : மூவேந்தர் பேர் இட்ட சீமையடி
நம்ம முப்பாட்டன் ஏர் விட்ட பூமியடி
வெள்ளாடு சிங்கத்தை சாடுமடி
இந்த வீரம் நம் மண்ணுக்கு சாட்சியடி
மண்ணின் பெருமை காத்திடணும்
அண்ணன் மொழியை கேட்டிடணும்

ஆண் : ஓர் இனத்து மக்கள் தான்
குழு : நாமெல்லாம் கண்ணம்மா
ஆண் : ஓர் வயித்து பிள்ளைதான்
குழு : எல்லோரும் பொன்னம்மா
ஆண் : அடி அம்மாடி தெம்மாங்கு
பாட்டு பாடும் நாள்தானோ

ஆண் : அட புதியது பிறந்தது
பழையது ஒதுங்குது
ஹர ஹர சிவ சிவ
பழைய பரமசிவமே
அட பைத்தியம் தெளிஞ்சது
வைத்தியம் பளிச்சது
ஹர ஹர சிவ சிவ
பழைய பரமசிவமே

ஆண் : ஒண்ணாச்சு பாரு
இதுவரை ரெண்டான ஊரு ஹேய்
அண்ணாச்சி மூளை முடிச்சது
பொன்னான வேலை
அட வீராப்பும் பொல்லாப்பும்
பொய்யா போச்சு அம்மம்மா…

குழு : அட புதியது பிறந்தது
பழையது ஒதுங்குது
ஹர ஹர சிவ சிவ
பழைய பரமசிவமே…..
அட பைத்தியம் தெளிஞ்சது
வைத்தியம் பளிச்சது
ஹர ஹர சிவ சிவ
பழைய பரமசிவமே…..ஏய்

Leave a Comment