பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமணியம்
இசையமைப்பாளர் : இளையராஜா
ஆண் : அம்மா அழகே
உலகின் ஒளியே
அம்மா அழகே
உலகின் ஒளியே
என் சங்கீதம் உன் கீதமே
உனை நான் அழைத்தால்
விழியில் மழையே
ஆண் : அம்மா அழகே
உலகின் ஒளியே
ஆண் : ஆகாயம் என் பாட்டில்
அசைகின்றது
என் சங்கீதம் பொய் என்று
யார் சொன்னது
ஆண் : கனவுகளே வழிவிடுங்கள்
கலைமகளை வரவிடுங்கள்
மலரில் உறங்கும் பூங்காற்று
அதனை எழுப்பும் என் பாட்டு
ஓடும் நிலாவே ஓளி தீபம் ஏற்று
ஆண் : ராகமே உயிராகுமே
அது பெற்றுத் தரும்
முத்துச் சரம்
சொந்தம் தரும் நல்வேதமும்
இன்பம் தரும் பொன்மந்திரம்
ஆண் : முந்தும் தீ என்னை
சுற்றிச் சுடுமே
எந்தன் இசை என்னை
எட்டிச் சுடுமே
ஆண் : இந்த வெப்பம் என்னை
என்ன செய்யும்
சந்தனங்கள் பூசுமோ
உள்ளிருக்கும் ஜோதி ஒன்று உண்டு
அதனை வெப்பம் தீண்டுமோ
ஆண் : படபட படவென
எரிகிற கொழுந்து
இமைகளை உரசுது
இது ஒரு அழகு
ஆண் : வேதம் கெடாது
தீயில் விழாது
யாரும் தொடாத சுருதி
அங்கம் பொடிபட நெஞ்சம் உருகிட
தேவி வருவது உறுதி
தேவி வருவது உறுதி
தேவி வருவது உறுதி