பாடகர்கள் : எஸ். ஜானகி மற்றும் எஸ் .பி. பாலசுப்ரமண்யம்
இசை அமைப்பாளர் : இளையராஜா
பெண் : ……………………………………..
ஆண் : {அந்தி மழை பொழிகிறது
ஒவ்வொரு துளியிலும்
உன் முகம் தெரிகிறது} (2)
இந்திரன் தோட்டத்து முந்திரியே
மன்மத நாட்டுக்கு மந்திரியே
ஆண் : அந்தி மழை பொழிகிறது
ஒவ்வொரு துளியிலும்
உன் முகம் தெரிகிறது
ஆண் : ஆ……… ஆ……… ஆ……… ஆ………
பெண் : தேனில் வண்டு மூழ்கும்போது….
ஆண் : ஆ………
பெண் : தேனில் வண்டு மூழ்கும்போது
பாவம் என்று வந்தாள் மாது
நெஞ்சுக்குள் தீயை வைத்து
மோகம் என்பாய்
தண்ணீரில் மூழ்கி கொண்டே
தாகம் என்பாய்
ஆண் : தனிமையிலே வெறுமையிலே
எத்தனை நாளடி இளமையிலே
கெட்டன இரவுகள் .. சுட்டன கனவுகள்
பெண் : ஆ…ஆ….
ஆண் : இமைகளும் சுமையடி இளமையிலே
ஆண் : அந்தி மழை பொழிகிறது
பெண் : ஒவ்வொரு துளியிலும்
உன் முகம் தெரிகிறது
குழு : ……………………………………………….
ஆண் : தேகம் யாவும் தீயின் தாகம்
ஆ…ஆ…..ஆ….ஆ……
ஆண் : தேகம் யாவும் தீயின் தாகம்
தாகம் தீர நீ தான் மேகம்
கண்ணுக்குள் முள்ளை வைத்து
யார் தைத்தது
தண்ணீரில் நிற்கும்போதே
வேர்க்கின்றது
பெண் : நெஞ்சு பொறு கொஞ்சம் இரு
தாவணி விசிறிகள் வீசுகிறேன்
மன்மத அம்புகள் தைத்த இடங்களில்
ஆண் : ஆ….ஆ….
பெண் : சந்தனமாய் எனை பூசுகிறேன்
பெண் : அந்தி மழை பொழிகிறது
ஆண் : ஒவ்வொரு துளியிலும்
உன் முகம் தெரிகிறது
பெண் : ஆ….ஆ…
சிப்பியில் தப்பிய நித்திலமே
ரகசிய ராத்திரி புத்தகமே
பெண் : அந்தி மழை பொழிகிறது
ஒவ்வொரு துளியிலும்
உன் முகம் தெரிகிறது