Devan Thantha Veenai Song Lyrics

in Unnai Naan Sandhithaen

பாடகர்கள் : எஸ். ஜானகி மற்றும் எஸ். பி. பாலசுப்ரமணியம்

இசையமைப்பாளர் : இளையராஜா

பெண் : ஆஆஆ…..ஆஆஆ….ஆ….ஆ….ஆ…..ஆ….ஆ….ஆ….
தேவன் தந்த வீணை
அதில் தேவி செய்த கானம்
தேவன் தந்த வீணை
அதில் தேவி செய்த கானம்
தேடும் கைகள் தேடினால்
அதில் ராகமின்றி போகுமோ
தேவன் தந்த வீணை
அதில் தேவி செய்த கானம்

பெண் : மேகம் பாடும்…..மேகம் பாடும்

ஆண் : மேகம் பாடும் பாடல் கேட்டேன்
நானும் பாடிப் பார்க்கிறேன்

பெண் : மேகம் பாடும் பாடல் கேட்டேன்
நானும் பாடிப் பார்க்கிறேன்

ஆண் : மோகமோ…..ஓஓஓ
மோகமோ சோகமோ
இனியும் நெஞ்சம் தூங்குமோ

பெண் : நாளும் நாளும் தேடுவேன்
தேவன் தந்த வீணை
அதில் தேவி செய்த கானம்
தேடும் கைகள் தேடினால்
அதில் ராகமின்றி போகுமோ
தேவன் தந்த வீணை
அதில் தேவி செய்த கானம்

பெண் : வானம் எந்தன் மாளிகை
வையம் எந்தன் மேடையே
வானம் எந்தன் மாளிகை
வையம் எந்தன் மேடையே

ஆண் : வண்ணங்கள் நான் எண்ணும் எண்ணங்கள்
எங்கிருந்தோ இங்கு வந்தேன்
இசையினிலே எனை மறந்தேன்
இறைவன் சபையில் கலைஞன் நான்

பெண் : தேவன் தந்த வீணை
ஆண் : அதில் தேவி செய்த கானம்
பெண் : தேடும் கைகள் தேடினால்
அதில் ராகமின்றி போகுமோ

இருவர் : தேவன் தந்த வீணை
அதில் தேவி செய்த கானம்

Leave a Comment