Ennodu Nee Irundhaal Song Lyrics

in I

பாடகி : சுனிதா சாரதி

பாடகர்கள் : எ.ஆர். ரஹ்மான், சித் ஸ்ரீராம்

இசையமைப்பாளர் : எ.ஆர். ரஹ்மான்

ஆண் : காற்றை தரும்
காடுகளே வேண்டாம்
ஓ தண்ணீர் தரும் கடல்கள்
வேண்டாம் நான் உண்ண
உறங்கவே பூமி வேண்டாம்
தேவை எதுவும் தேவையில்லை
தேவை எல்லாம் தேவதையே

ஆண் : { என்னோடு நீ
இருந்தால் உயிரோடு
நான் இருப்பேன்
என்னோடு நீ
இருந்தால் உயிரோடு
நான் இருப்பேன் } (3)

ஆண் : என்னை நான்
யாரென்று சொன்னாலும்
புரியாதே என் காதல் நீயென்று
யாருக்கும் தெரியாதே நீ கேட்டால்
உலகத்தை நான் வாங்கி தருவேனே
நீ இல்லா உலகத்தில் நான் வாழ
மாட்டேனே என்னோடு நீ இருந்தால்

ஆண் : உண்மைக் காதல்
யாரென்றால் உன்னை
என்னை சொல்வேனே
நீயும் நானும் பொய்
என்றால் காதலை தேடி
கொல்வேனே கூந்தல் மீசை
ஒன்றாக ஊசி நூலில் தைப்பேனே
தேங்காய்க்குள்ளே நீர் போல
நெஞ்சில் தேக்கி வைப்பேனே

பெண் : வத்திகுச்சி காம்பில்
ரோஜா பூக்குமா பூனை தேனை
கேட்டால் பூக்கள் ஏற்குமா
முதலை குளத்தில் மலராய்
மலர்ந்தேன் குழந்தை அருகே
குரங்காய் பயந்தேன்

ஆண் : என்னோடு நீ
இருந்தால் உயிரோடு
நான் இருப்பேன்
என்னோடு நீ
இருந்தால் உயிரோடு
நான் இருப்பேன்

என்னோடு நீ
இருந்தால் உயிரோடு
நான் இருப்பேன்
உயிரோடு நான்
இருப்பேன்

ஆண் : { என்னோடு நீ
இருந்தால் உயிரோடு
நான் இருப்பேன்
என்னோடு நீ
இருந்தால் உயிரோடு
நான் இருப்பேன் } (2)

ஆண் : நீ இல்லா உலகத்தில்
நான் வாழ மாட்டேனே
என்னோடு நீ இருந்தால்

Leave a Comment