Enthan Vanil Song Lyrics

in Kadhal Virus

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் ஸ்வர்ணலதா

இசையமைப்பாளர் : ஏ. ஆர். ரஹ்மான்

பெண் : ஆஅ…ஆஅ…ஆஅ..ஆ…ஆஅ..ஆ..
ஆஅ….ஆஅ…ஆஅ…ஆ…ஆஅ…ஆ..
ஆஅ…ஆஅ….ஆஆ..ஆ…ஆ…
ஆஅ…ஆஅ…ஆஅ..ஆ…ஆ ஆ..ஆ..

ஆண் : வாழ்க வாழ்கவே
வாழ்க நீயும்
வானம் உள்ளவரை
வாழ்க என்றும்
வாழ்க வாழ்கவே
காதல் வாழும் வரை
வாழ்கவே

ஆண் : வாழ்க வாழ்கவே
வாழ்க நீயும்
வானம் உள்ளவரை
வாழ்க என்றும்
வாழ்க வாழ்கவே
காதல் வாழும் வரை
வாழ்கவே

ஆண் : எந்தன் வானின்
காதல் நிலவே
இன்று தேய்வது
எதனால் நிலவே

ஆண் : எந்தன் வானின்
காதல் நிலவே
இன்று தேய்வது
எதனால் நிலவே
நீயும் வளர்பிறையாக
நிலவே-ஏ-ஏ
நீயும் வளர்பிறையாக நிலவே
உயிரை தரும் என் காதல்
நிலவே நிலவே

ஆண் : எந்தன் வானின்
காதல் நிலவே
இன்று தேய்வது
எதனால் நிலவே

பெண் : ஆஅ…ஆஅ…ஆஅ..ஆ…ஆஅ..ஆ..
ஆஅ….ஆஅ…ஆஅ…ஆ…ஆஅ…ஆ..
ஆஅ…ஆஅ….ஆஆ..ஆ…ஆ…
ஆஅ…ஆஅ…ஆஅ..ஆ…ஆ ஆ..ஆ..

பெண் : திறனா திறனா தீரன..(4)

ஆண்: வெண்பனி நீ தூங்கிய
புல் வெளி நான்
வெண்ணிலா நீ மின்னிய
விண்வெளி நான்

ஆண்: வெண்பனி நீ தூங்கிய
புல் வெளி நான்
வெண்ணிலா நீ மின்னிய
விண்வெளி நான்
மின்னல் கோடி சேர்த்து வைத்தேன்
நீ சிரித்த காட்சிகள்
யாவும் இன்று மாயமாக
யாரை கேட்க சாட்சிகள்

ஆண் : உன்னை எண்ணி வாழ்ந்த காலம்
கண்கள் ரெண்டும் ஈரமாக
காதல் ஒன்றும் காயமல்ல
காலப்போக்கில் ஆறி போக
நெஞ்சம் எல்லாம் வாழுதே
தழும்புகளால்

ஆண் : எந்தன் வானின்
காதல் நிலவே
இன்று தேய்வது
எதனால் நிலவே

ஆண் : எந்தன் வானின்
காதல் நிலவே
இன்று தேய்வது
எதனால் நிலவே

ஆண் : என்னை விட்டு போனது
அமைதி அன்றோ
நீயும் இல்லா நானுமே
அகதி அன்றோ
நூறு கோடி ஆண்டு காலம்
வாழ்வதிங்கு வீணடி
எந்தன் காதல் நீ அறிந்தால்
போதும் அந்த ஓர் நொடி

ஆண் : புல்லின் மீது போகும்போது
கால் சிவந்த வெண்மை நீ
கல்லின் மீது நீயும் இங்கு
போவதென்ன கண்மணி
இந்த ஜென்மம் வாழ்வதே
உனக்கெனதான்

ஆண் : எந்தன் வானின்
காதல் நிலவே
இன்று தேய்வது
எதனால் நிலவே
நீயும் வளர்பிறையாக
நிலவே
உயிரை தருவேன் என் காதல்
நிலவே நிலவே

ஆண் : எந்தன் வானின்
காதல் நிலவே
இன்று தேய்வது
எதனால் நிலவே

Leave a Comment