Gangai Nadhi Meeno Song Lyrics

in Niyayam

பாடகர்கள் : எஸ். ஜானகி மற்றும் கே. ஜே. ஜேசுதாஸ்

இசையமைப்பாளர் : இளையராஜா

குழு : ஆஅ….ஆ….ஆ…..ஆஅ…
ஆஅ….ஆ….ஆ…..ஆஅ…
ஆஅ….ஆ….ஆ…..ஆஅ…

ஆண் : கங்கை நதி மீனோ
மங்கை விழிதானோ
கங்கை நதி மீனோ
மங்கை விழிதானோ

பெண் : அங்கம் யாவும்
தங்கப் பாலம்
பொங்கிப் பாயும்
ஆசை வேகம் தனனன

ஆண் : கங்கை நதி மீனோ
மங்கை விழிதானோ

ஆண் : பாவை உனைத் தழுவ
நெஞ்சில் பாடல் மலருதடி
பாவை உனைத் தழுவ
நெஞ்சில் பாடல் மலருதடி

ஆண் : காதல் உலகில்
மாலை மயக்கம்
கனியே ஏனடி தயக்கம்
காதல் உலகில்
மாலை மயக்கம்
கனியே ஏனடி தயக்கம்

ஆண் : வெக்கத்துக்கு……
பெண் : வேலை இல்லை
ஆண் : பக்கம் வந்தால்….
பெண் : பாவம் இல்லை
ஆண் : வாலிபத்தின் சந்தையில்
வெட்கம் விலை போகாது

பெண் : கங்கை நதி மீனோ
மங்கை விழிதானோ

ஆண் : அங்கம் யாவும்
தங்கப் பாலம்
பொங்கிப் பாயும்
ஆசை வேகம் ஆஹாஹா

பெண் : கங்கை நதி மீனோ
மங்கை விழிதானோ

பெண் : பாரி வள்ளல் தேர் கொடுத்தால்
பச்சைக் கொடியும் படராதோ
அந்தக் கொடியும் இடம் கொடுத்தால்
மிச்சக் கதையும் தொடராதோ

பெண் : கை இரண்டில் இடை
கொடியாய் துவள
கனி இதழ் தேன் தனைப் பருக
கை இரண்டில் இடை
கொடியாய் துவள
கனி இதழ் தேன் தனைப் பருக

பெண் : கோடி சுகம்……
ஆண் : கொஞ்சட்டுமே
பெண் : கொள்ளை இன்பம்…..
ஆண் : அள்ளட்டுமே
பெண் : உள்ளம் கொஞ்சம் கெஞ்சட்டும்
மன்மதக் கலைகள்

ஆண் : கங்கை நதி மீனோ
மங்கை விழிதானோ

பெண் : அங்கம் யாவும்
தங்கப் பாலம்
பொங்கிப் பாயும்
ஆசை வேகம் தனனன

ஆண் : கங்கை நதி மீனோ
மங்கை விழிதானோ

Leave a Comment