பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமணியம்
இசையமைப்பாளர் : இளையராஜா
ஆண் : இளைய நிலா பொழிகிறதே
இதயம் வரை நனைகிறதே
உலாப் போகும் மேகம் கனாக் காணுமே
விழாக் காணுமே வானமே
ஆண் : இளைய நிலா பொழிகிறதே
இதயம் வரை நனைகிறதே
உலாப் போகும் மேகம் கனாக் காணுமே
விழாக் காணுமே வானமே
ஆண் : இளைய நிலா பொழிகிறதே
இதயம் வரை நனைகிறதே
ஆண் : வரும் வழியில் பனி மழையில்
பருவ நிலா தினம் நனையும்
முகிலெடுத்து முகம் துடைத்து
விடியும் வரை நடை பழகும்
ஆண் : வரும் வழியில் பனி மழையில்
பருவ நிலா தினம் நனையும்
முகிலெடுத்து முகம் துடைத்து
விடியும் வரை நடை பழகும்
ஆண் : வான வீதியில் மேக ஊர்வலம்
காணும் போதிலே ஆறுதல் தரும்
பருவ மகள் விழிகளிலே கனவு வரும்
ஆண் : இளைய நிலா பொழிகிறதே
உலாப் போகும் மேகம் கனாக் காணுமே
விழாக் காணுமே வானமே
இளைய நிலா பொழிகிறதே
ஆண் : முகிலினங்கள் அலைகிறதே
முகவரிகள் தொலைந்தனவோ
முகவரிகள் தவறியதால்
அழுதிடுமோ அது மழையோ
ஆண் : முகிலினங்கள் அலைகிறதே
முகவரிகள் தொலைந்தனவோ
முகவரிகள் தவறியதால்
அழுதிடுமோ அது மழையோ
ஆண் : நீல வானிலே வெள்ளி ஓடைகள்
ஓடுகின்றதே என்ன ஜாடைகள்
விண்வெளியில் விதைத்தது
யார் நவமணிகள்
ஆண் : இளைய நிலா பொழிகிறதே
இதயம் வரை நனைகிறதே
உலாப் போகும் மேகம் கனாக் காணுமே
விழாக் காணுமே வானமே
இளைய நிலா பொழிகிறதே