Kadellam Pichipoovu Song Lyrics

in Karaiyellam Shenbagapoo

பாடகர்கள் : இளையராஜா மற்றும் குழு

இசையமைப்பாளர் : இளையராஜா

பாடலாசிரியர் : பஞ்சு அருணாசலம்

ஆண் : காடெல்லாம் பிச்சிபூவூ….
கரையெல்லாம் செண்பகப்பூ…….
நாடே மணக்குதில்ல
அந்த நல்ல மகன் போற பாதை…….

ஆண் : காடெல்லாம் பிச்சிபூவூ……..

குழு : ……………………….

ஆண் : சாய்ந்தாடும் நெற்கதிரே சதிராடும் வாழைகளே
சாய்ந்தாடும் நெற்கதிரே சதிராடும் வாழைகளே
தேனாட்டம் வெள்ளம் ஓட ஓடுதடி என் மனசு
தேனாட்டம் வெள்ளம் ஓட ஓடுதடி என் மனசு

ஆண் : செந்தாழம் பூவில் உள்ள வாசம் கொள்ளை போக
ஏதேதோ மோகம் தீராத தாகம்
ஏதேதோ மோகம் தீராத தாகம்

ஆண் : காடெல்லாம் பிச்சிபூவூ…..
கரையெல்லாம் செண்பகப்பூ..

ஆண் : ஏலோஏலேலொலோ……..
ஆண் : ஏலோ…..
ஆண் : கரிசக்காடு
ஆண் : ஏலோ…..
ஆண் : பலமாகத்தான்
ஆண் : ஏலோ…..
ஆண் : ஏத்தம் கட்டி…
ஆண் : ஏலோ…..
ஆண் : ஏலோஏலேலொலோ

ஆண் : அத்தை மவன்
ஆண் : ஏலோ…..
ஆண் : இறைக்கும் தண்ணி
ஆண் : ஏலோ…..
ஆண் : அத்தனையும்
ஆண் : ஏலோ….
ஆண் : சக்கரைதான்……
ஆண் : ஏலோ….
ஆண் : சக்கரைதான்……ஏலேலோ……..

ஆண் : வயலெல்லாம் அறுவடையாம் கட்டழகு பொண்ணுகளாம்
வயலெல்லாம் அறுவடையாம் கட்டழகு பொண்ணுகளாம்
பார்த்தா கிறங்குதில்ல செவ்வரளி தோரணமாம்
பார்த்தா கிறங்குதில்ல செவ்வரளி தோரணமாம்

ஆண் : கொண்டாடும் தென்றல் வந்து
தொட்டுச் செல்லும்போது
தாளாத மோகம் யாராலே தீரும்
தாளாத மோகம் யாராலே தீரும்

ஆண் : காடெல்லாம் பிச்சிபூவூ……..
கரையெல்லாம் செண்பகப்பூ…….
நாடே மணக்குதில்ல
அந்த நல்ல மகன் போற பாதை…….

ஆண் : காடெல்லாம் பிச்சிபூவூ……

Leave a Comment