Kalyana Mela Satham Song Lyrics

in Thambikku Entha Ooru

பாடகி : எஸ். ஜானகி

இசை அமைப்பாளர் : இளையராஜா

குழு : ………………………………..

பெண் : கல்யாண மேள சத்தம்
எங்கேயோ கேட்குது
என்னமோ தோணுது
கன்னியின் நெஞ்சுக்குள்ளே
மொட்டாக மலருது
சிட்டாக பறக்குது

பெண் : கல்யாண மேள சத்தம்
எங்கேயோ கேட்குது
என்னமோ தோணுது
கன்னியின் நெஞ்சுக்குள்ளே
மொட்டாக மலருது
சிட்டாக பறக்குது

குழு : {அடி கரும்பு கடிச்சு திங்க
ஆச வந்தாச்சு
கொடி கரும்பு விட்டு மனம் பரப்ப
நேரம் வந்தாச்சு} (2)

பெண் : புது காத்து வீசுதடி
பூ ஆட தோணுதடி
அன்னம் போல் ஓடையில
அருவி தண்ணி ஓடுதடி

பெண் : வெள்ளி தெண்ட மீன போல
துள்ளுதடி என் மனசு
வெள்ளி தெண்ட மீன போல
துள்ளுதடி என் மனசு

பெண் : சில்லுவண்டு கண்ணு ரெண்டும்
சுத்துது சொழலுது
அள்ளி தண்டு மேனி எங்கும்
சந்தனம் மணக்குது
சுட்டு வைக்கும் வெட்கம் வந்து
தள்ளாட…ஹோய்

குழு : {அடி கரும்பு கடிச்சு திங்க
ஆச வந்தாச்சு
கொடி கரும்பு விட்டு மனம் பரப்ப
நேரம் வந்தாச்சு} (2)

பெண் : மலையேறி மேஞ்சு வரும்
மணி கழுத்து வெள்ள பசு
மாலையில வீடு வரும்
ஜோடி ஒன்னு சேர்ந்து வரும்

பெண் : மணி ஓசை கேக்கும் போது
மயங்குது என் மனசு
மணி ஓசை கேக்கும் போது
மயங்குது என் மனசு

பெண் : துள்ளி வரும் கன்று குட்டி
முட்டுது மெறழுது
முட்டி முட்டி பால் குடிக்க
தாய் பசு அழைக்குது
அந்த சுகம் என்ன சுகம்
அம்மாடி ….ஹோய்……….

பெண் : கல்யாண மேள சத்தம்
எங்கேயோ கேட்குது
என்னமோ தோணுது
கன்னியின் நெஞ்சுக்குள்ளே
மொட்டாக மலருது
சிட்டாக பறக்குது

குழு : {அடி கரும்பு கடிச்சு திங்க
ஆச வந்தாச்சு
கொடி கரும்பு விட்டு மனம் பரப்ப
நேரம் வந்தாச்சு} (2)

Leave a Comment