in Geethanjali
பாடகி : கே.எஸ். சித்ரா
பாடகர் : இளையராஜா
இசையமைப்பாளர் : இளையராஜா
பெண் : ஆஹா ஆஆஆஆஆ
மலரே பேசு மௌன மொழி
மனம் தான் ஓடும் ஆசை வழி
வாசலை தேடி ஓடி வந்தேன்
வாலிப ராகம் பாடி வந்தேன்
பெண் : மலரே பேசு
மௌன மொழி
மலரே…
ஆண் : வாசனை பூக்கள்
வாய் வெடிக்க ஆயிரம்
ஈக்கள் தேன் குடிக்க
பெண் : நானொரு பூவோ
நீ பறிக்க நால்வகை குணமும்
நான் மறக்க
ஆண் : மெதுவாய் குலுங்கும்
மாங்கனியே கிடைத்தால்
விடுமோ ஆண் கிளியே
பெண் : மடிமேல் கொடி
போல் விழுந்தேனே
ஆண் : மலரே பேசு மௌன மொழி
மனம் தான் ஓடும் ஆசை வழி
வாசலை தேடி ஓடி வந்தேன்
வாலிப ராகம் பாடி வந்தேன்
ஆண் : மலரே பேசு
மௌன மொழி
மலரே
பெண் : ஏந்திய வீணை
நானிருக்க ஏழிசை மீட்ட
நீ இருக்க
ஆண் : ராத்திரி நேர ராகமிது
பூவோடு காற்று பாடுவது
பெண் : இதழால் இனி
மேல் நீ எழுதும் கதைதான்
படித்தேன் நாள் முழுதும்
ஆண் : படித்தால் எனக்கும்
இனிக்காதோ …
பெண் : மலரே பேசு
மௌன மொழி
ஆண் : மனம் தான்
ஓடும் ஆசை வழி
பெண் : வாசலை தேடி
ஓடி வந்தேன்
ஆண் : வாலிப ராகம்
பாடி வந்தேன்
பெண் : மலரே பேசு
மௌன மொழி
ஆண் & பெண் : மலரே