Mancholai Kilithano Song Lyrics

in Kizhakke Pogum Rail

பாடகர் : ஜெயசந்திரன்

இசையமைப்பாளர் : இளையராஜா

ஆண் : மாஞ்சோலை கிளிதானோ மான்தானோ
வேப்பந்தோப்புக் குயிலும் நீதானோ

ஆண் : மாஞ்சோலை கிளிதானோ மான்தானோ
வேப்பந்தோப்புக் குயிலும் நீதானோ
இவள் ஆவாரம் பூ தானோ நடை தேர்தானோ
சலங்கைகள் தரும் இசை தேன்தானோ….ஓ…..

ஆண் : மாஞ்சோலை கிளிதானோ மான்தானோ
வேப்பந்தோப்புக் குயிலும் நீதானோ
இவள் ஆவாரம் பூ தானோ நடை தேர்தானோ
சலங்கைகள் தரும் இசை தேன்தானோ….ஓ…..

ஆண் : நீரோடை போலவே சிரித்தாடி ஓடினாள்
நீரோடை போலவே சிரித்தாடி ஓடினாள்
வளையோசையே காதிலே சிந்து பாடுதே
பளிங்குச்சிலையே பவழக்கொடியே
குலுங்கி வரும் இடையில் புரளும்
சடையில் மயக்கும் மலர்க்கொடி

ஆண் : மாஞ்சோலை கிளிதானோ மான்தானோ
வேப்பந்தோப்புக் குயிலும் நீதானோ
இவள் ஆவாரம் பூ தானோ நடை தேர்தானோ
சலங்கைகள் தரும் இசை தேன்தானோ….ஓ…..

ஆண் : மின்னல் ஒளியென கண்ணைப் பறித்திடும்
அழகோ தேவதையோ
மின்னல் ஒளியென கண்ணைப் பறித்திடும்
அழகோ தேவதையோ
அங்கம் ஒரு தங்கக்குடம் அழகினில்
மங்கை ஒரு கங்கை நதி உலகினில்
துள்ளும் இதழ் தேன்தான் அள்ளும் கரம் நான்தான்
மஞ்சமதில் வஞ்சிக்கொடி வருவாள் சுகமே
வருவாள் சுகமே தருவாள் மகிழ்வேன்
கண் காவியம் பண் பாடிடும்
பெண்ணோவியம் செந்தாமரையே

ஆண் : மேலாடை மாங்கனி அசைந்தாடும் வேளையில்
பலகோடிகள் ஆசையே வந்து மோதுதே
கரும்பு வயலே குறும்பு மொழியே
இளமையெனும் தனிமை நெருப்பை
அணைக்கும் பருவ மழை முகில்

ஆண் : மாஞ்சோலை கிளிதானோ மான்தானோ
வேப்பந்தோப்புக் குயிலும் நீதானோ
இவள் ஆவாரம் பூ தானோ நடை தேர்தானோ
சலங்கைகள் தரும் இசை தேன்தானோ….ஓ…..

ஆண் : மாஞ்சோலை கிளிதானோ மான்தானோ
வேப்பந்தோப்புக் குயிலும் நீதானோ

Leave a Comment