Naan Undan Thaayaaga Song Lyrics

in Ullasa Paravaigal

பாடகி : எஸ். ஜானகி

இசை அமைப்பாளர் : இளையராஜா

பெண் : நான் உந்தன் தாயாக வேண்டும்
நீ எந்தன் சேயாக வேண்டும்
ஆனதெல்லாம் ஆகட்டுமே ஆறுதலே
சேரட்டுமே ஆனந்தமே வா

பெண் : நான் உந்தன் தாயாக வேண்டும்
நீ எந்தன் சேயாக வேண்டும்…..

பெண் : ஆ…..போன காலம்
போன பின்னே
மாறிடும் காலங்கள் உந்தன் வாழ்விலே
வானம் யாவும் மேகம் வந்து
தேன்மழை ஆறாக பொங்கும் வசந்தமே

பெண் : நீயும் இங்கே நானும் அங்கே
தீபம் எங்கே கோவில் இங்கே
ஏக்கமா இன்னுமா தேவையா…..

பெண் : நான் உந்தன் தாயாக வேண்டும்
நீ எந்தன் சேய் ஆக வேண்டும்…..

பெண் : ஆ…..சோகம் கொண்டு
சோர்ந்து நின்றால்
ஆயிரம் துன்பங்கள் உன்னை சேருமே
வாழ்க என்று ஆசை கொண்டால்
காவிய இன்பங்கள் என்றும் கோடியே

பெண் : காதல் உள்ளம்
கண்ணில் நிற்கும்
காதல் கொள்ளும் பாசம் சொல்லும்
நேசமே தாய்மையின் கீதமே…..

பெண் : நான் உந்தன் தாயாக வேண்டும்
நீ எந்தன் சேய் ஆக வேண்டும்
ஆனதெல்லாம் ஆகட்டுமே ஆறுதலே
சேரட்டுமே ஆனந்தமே வா…

பெண் : லால லாலலா லால லாலலா….

Leave a Comment