Neeyum Naanum Onnu Endra Song Lyrics

in Kizhakke Pogum Rail

பாடகர்கள் : மலேசியா வாசுதேவன் மற்றும் குழு

இசையமைப்பாளர் : இளையராஜா

ஆண் : ஏ……ஹோய்

குழு : ஏ……ஹோய்

ஆண் : ஏ…..ஹோய் ஏ…..ஏ…..

ஆண் : எல்லாருக்கும் எல்லாமும் கெடச்சதுன்னா
ஏத்தமில்லே எறக்கமில்லே ஏய்ப்பதற்கும் ஆளுமில்லே
ஏழை என்றே இனம் பிரிச்சா
பாழும் மனம் ஆச வச்சேன்
பாவம் செய்ய தூபம் போடும்……..

குழு : ஆமா தூபம் போடும்

வசனம் : ……………………………..

ஆண் : நீயும் நானும் ஒன்னு என்ற நெலமை வேணுங்க
அந்த நேரம் காலம் சேரும் வரையில்
காவல் வேணுங்க நம்ம காவல் வேணுங்க
நீயும் நானும் ஒன்னு என்ற நெலமை வேணுங்க
அந்த நேரம் காலம் சேரும் வரையில்
காவல் வேணுங்க நம்ம காவல் வேணுங்க

குழு : சபாஷ்…….சபாஷ்…….மேலே போ………

ஆண் : நாளை மாறும் காலமின்னு ஏங்கிய மனசு
பல நாள் வாயும் வயிறும் காயும்போது மாறுவதுண்டு
ஏழை வயிறு மூணு வேளை காணுகிற வரைக்கும்
நம்ம காவல் காக்கும் பரம்பரைக்கே
தலைவலி இருக்கு தம்பி தலைவலி இருக்கு

குழு : ஆமா தலைவலி இருக்கு ஆமா தலைவலி இருக்கு

ஆண் : நீயும் நானும் ஒன்னு என்ற நெலமை வேணுங்க
அந்த நேரம் காலம் சேரும் வரையில்
காவல் வேணுங்க நம்ம காவல் வேணுங்க

குழு : சபாஷ்…….பலே…….இன்னும் மேலே போ………

ஆண் : ஓடி ஓடி வெதவெதச்சான் உற்சாகத்தோடு

குழு : சபாஷ்…….அப்படி போடு சபாஷ்

ஆண் : உழவன் ஈடில்லாத உழைப்பை
இங்கே விளைச்சலில் பாரு

குழு : பலே……பலே……பலே……பலே……

ஆண் : ஆடிப்பாடி கதிர் அறுப்பான் ஆனந்தத்தோடு
ஆனா அறுத்த கருது போற இடம்
வேறொரு வீடு தம்பி வேறொரு வீடு……..

குழு : ஆமா வேறொரு வீடு ஆமா வேறொரு வீடு……..

ஆண் : நீயும் நானும் ஒன்னு என்ற நெலமை வேணுங்க
அந்த நேரம் காலம் சேரும் வரையில்
காவல் வேணுங்க நம்ம காவல் வேணுங்க
குழு : நம்ம காவல் வேணுங்க நம்ம காவல் வேணுங்க

ஆண் : நம்ம காவல் வேணுங்க

குழு : நம்ம காவல் வேணுங்க

ஆண் : ஆடிப்பாடி கதிர் அறுப்பான் ஆனந்தத்தோடு
ஆனா அறுத்த கருது போற இடம்
வேறொரு வீடு தம்பி வேறொரு வீடு……..
ஆமா வேறொரு வீடு

குழு : சபாசு…….அப்படி போடு சபாசு

Leave a Comment