Ore Naal Unnai Naan Song Lyrics

in Ilamai Oonjal Aadukirathu

பாடகி : வாணி ஜெயராம்

பாடகர் : எஸ்.பி. பாலசுப்ரமணியம்

இசையமைப்பாளர் : இளையராஜா

ஆண் : ஒரே நாள்
உன்னை நான்
நிலாவில் பார்த்தது
உலாவும் உன் இளமை
தான் ஊஞ்சலாடுது

பெண் : ஒரே நாள்
உன்னை நான்
நிலாவில் பார்த்தது
உலாவும் உன் இளமை
தான் ஊஞ்சலாடுது

ஆண் : { மங்கைக்குள்
காதலெனும் கங்கைக்குள்
நான் மிதக்க } (2)

பெண் : சங்கமங்களில்
இடம் பெரும் சம்பவங்களில்
இதம் இதம்

ஆண் : பணத்தால்
நினைத்தால் இனிப்பதென்ன

பெண் : ஒரே நாள்
உன்னை நான்
நிலாவில் பார்த்தது
உலாவும் உன் இளமை
தான் ஊஞ்சலாடுது

ஆண் : { நெஞ்சத்தில்
பேர் எழுதி கண்ணுக்குள்
நான் படித்தேன் } (2)

ஆண் : கற்பனைகளில்
சுகம் சுகம் கண்டதென்னவோ
நிதம் நிதம்

பெண் : மழை நீ
நிலம் நான் மயக்கம்
என்ன

ஆண் : ஒரே நாள்
உன்னை நான்
நிலாவில் பார்த்தது
உலாவும் உன் இளமை
தான் ஊஞ்சலாடுது

குழு : ………………………………….

ஆண் : { பஞ்சணைப் பாடலுக்கு
பல்லவி நீ இருக்க } (2)

பெண் : கண்ணிரண்டிலும்
ஒரே ஸ்வரம் கையிரண்டிலும்
ஒரே லயம்

ஆண் : இரவும் பகலும்
இசை முழங்க

ஆண் : ஒரே நாள்
உன்னை நான்
பெண் : நிலாவில் பார்த்தது
ஆண் : உலாவும்
ஆண் & பெண் : உன் இளமை
தான் ஊஞ்சலாடுது ஊஞ்சலாடுது

ஆண் & பெண் : ஆ ஹா ஆ ஹா

Leave a Comment