Oru Jeevan Azhaithadhu Sad Song Lyrics

in Geethanjali

பாடகி : கே.எஸ். சித்ரா

இசையமைப்பாளர் : இளையராஜா

பெண் : ஒரு ஜீவன் அழைத்தது
ஒரு ஜீவன் துடித்தது இனி
எனக்காக அழ வேண்டாம்
துளி கண்ணீரும் விட வேண்டாம்
உன்னையே எண்ணியே வாழ்கிறேன்
உன்னையே எண்ணியே வாழ்கிறேன்

பெண் : ஒரு ஜீவன் அழைத்தது
ஒரு ஜீவன் துடித்தது

ஆண் : ஓஓஹோ ஓஓஓஓ
ஆஆஹா ஆஆஹா ஆஆஹா

ஆண் : சோலை குயிலே என்
சோகம் சோகம் மாலை கை
மாறுமா ஹான் புயலில் மரம்
எல்லாம் வாடும் போது பொம்மை
போராடுமா

ஆண் : யாரோடு யாரோ யார்
சேருவாரோ விதி போடும்
கோடு மாறாது நெனவங்கு
வந்து கனவாகி போனால்
தளிர் போன்ற பெண்மை
தாளாது

ஆண் : அலை மீண்டும் திரும்புமா
மலர் மீண்டும் அரும்புமா மலர்
மாலை வந்து தோள் சேருமா

பெண் : ஒரு ஜீவன் அழைத்தது
ஒரு ஜீவன் துடித்தது

பெண் : பச்சை கிளி இங்கு
பாவம் பாவம் கூடே கூண்டானது
காதல் எல்லாமே மாயம் மாயம்
கண்ணீர் ஆறானது

பெண் : மழை மேகம் வந்து
திசை மாற கண்டு தளிர் ஒன்று
இங்கே வாடாதோ கன்னங்கள்
எங்கும் கண்ணீரின் காயம்
தாங்காத பெண்மை தூங்காதோ

பெண் : இணை தேடும்
தலைவனே நனையாதோ
தலையணை இந்த ஏழை
வாழ்வில் என் சோதனை

ஆண் : ஒரு ஜீவன் அழைத்தது
ஒரு ஜீவன் துடித்தது இனி எனக்காக
அழ வேண்டாம் துளி கண்ணீரும்
விட வேண்டாம் உன்னையே
எண்ணியே வாழ்கிறேன்
உன்னையே எண்ணியே வாழ்கிறேன்

பெண் : ஒரு ஜீவன் அழைத்தது
ஒரு ஜீவன் துடித்தது

Leave a Comment