Oththaiyela Penkuthirai Song Lyrics

in Nalla Naal

பாடகர்கள் : எஸ். ஜானகி மற்றும் மலேசியா வாசுதேவன்

இசையமைப்பாளர் : இளையராஜா

பெண் : தன்னன்னன்னே னானன்னன்னே
னானன்னன்னே னானானானா

பெண் : ஒத்தையில பெண் குதிர
நிக்குதையா தனியா தனியா
பொட்டையின்னு ஒதுக்காதே
பிரிஞ்சா வாடும்
ரெட்டையில இருந்தாதான்
சொகமாச் சேரும்
இணையா தொணையா சேர்ந்துக்க
விடுயா விடுயா
இணையா தொணையா சேர்ந்துக்க
விடுயா விடுயா

பெண் : ஒத்தையில பெண் குதிர
நிக்குதையா தனியா தனியா

பெண் : கொள்ளு வெச்ச மாமா
தள்ளி வைக்கலாமா…..கொஞ்சம் விடு
கொள்ளு வெச்ச மாமா
தள்ளி வைக்கலாமா…..கொஞ்சம் விடு
சாட்ட கொம்ப நீட்டி
சும்மா சும்மா காட்டி
வண்டியில பூட்டி என்ன சொகம்

ஆண் : பொல்லாதம்மா பொட்டக் குதிர
பித்துப் பிடிச்ச மட்டக் குதிர
பொல்லாதம்மா பொட்டக் குதிர
பித்துப் பிடிச்ச மட்டக் குதிர
சொன்னாலும் கேக்காது
போம்மா போம்மா உனக்கிது
ஏம்மா ஏம்மா

பெண் : ஒத்தையில பெண் குதிர
நிக்குதையா தனியா தனியா

பெண் : குட்டிகள போட பொட்ட இங்கு வாட
வந்தா என்ன
குட்டிகள போட பொட்ட இங்கு வாட
வந்தா என்ன
புல்லு மெத்த போட்டு
மெல்ல மெல்லச் சேர்ந்து
பாட வேணும் பாட்டு புல்லரிக்க

ஆண் : போடாதே நீ தப்புக் கணக்கு
இன்னும் அதுக்கு காலம் இருக்கு
போடாதே நீ தப்புக் கணக்கு
இன்னும் அதுக்கு காலம் இருக்கு
என் பாடு என்னோடு
விடுமா விடுமா ஆசை இப்ப
வருமா வருமா

ஆண் : ஒத்தையில பெண் குதிர
நிக்கட்டுமே தனியா தனியா
கட்டாம இருந்தாலே காவல் மீறும்
அம்மாடி என் மேல குதிர ஏறும்
தெரியும் தெரியும்
எனக்கது புரியும் புரியும்

பெண் : ம்ஹும் ம்ஹும்
ம்….ம்ஹும் ம்ஹும்

ஆண் : ஒத்தையில பெண் குதிர
நிக்கட்டுமே தனியா தனியா

Leave a Comment