Palanaal Aasai Song Lyrics

in Indru Poi Naalai Vaa

பாடகர்கள் : மலேசியா வாசுதேவன் மற்றும் பி. சுசீலா

இசையமைப்பாளர் : இளையராஜா

ஆண் : பல நாள் ஆசை திருநாளாச்சி
மணநாள் காண்போம் வா வா
நாம் மணநாள் காண்போம் வா வா
இது மாலை சூடும் நேரம்
இனி காண்போம் ராஜ யோகம்

பெண் : பல நாள் ஆசை திருநாளாச்சி
மணநாள் காண்போம் வா வா
நாம் மணநாள் காண்போம் வா வா
இது மாலை சூடும் நேரம்
இனி காண்போம் ராஜ யோகம்

பெண் : பல நாள் ஆசை திருநாளாச்சி
மணநாள் காண்போம் வா வா

பெண் : மலரில் தூங்கும் பனியும் நானே
பனியை தேடும் ஒளி நீயே
மலரில் தூங்கும் பனியும் நானே
பனியை தெடும் ஒளி நீயே
பூவை உடலோ பூச்சரம்
பொங்கும் மனமோ போர்க்களம்

ஆண் : சித்திர பெண்ணே வா
அடி செந்தமிழ் முத்தே வா
சித்திர பெண்ணே வா
அடி செந்தமிழ் முத்தே வா
பூவும் நீயானால்
தென்றல் காற்றும் நான்தானே

பெண் : பல நாள் ஆசை திருநாளாச்சி
மணநாள் காண்போம் வா வா
நாம் மணநாள் காண்போம் வா வா

ஆண் : எழிலார் பாவை இதழோ கோவை
இதில் ஓர் முத்தம் தரலாமா
எழிலார் பாவை இதழோ கோவை
இதில் ஓர் முத்தம் தரலாமா
மங்கை உன் மேல் சாயவா
கங்கை நதி போல் பாயவா

பெண் : குங்கும பொட்டோடு
இந்த மல்லிகை மொட்டோடு
குங்கும பொட்டோடு
இந்த மல்லிகை மொட்டோடு
யாரும் காணாத சொர்க்கம்
இங்கே காண்போமே

ஆண் : பல நாள் ஆசை திருநாளாச்சி
மணநாள் காண்போம் வா வா நாம்
மணநாள் காண்போம் வா வா

பெண் : இது மாலை சூடும் நேரம்
இனி காண்போம் ராஜ யோகம்
பல நாள் ஆசை திருநாளாச்சி
மணநாள் காண்போம் வா வா

இருவர் : பல நாள் ஆசை திருநாளாச்சி
மணநாள் காண்போம் வா வா
நாம் மணநாள் காண்போம் வா வா

Leave a Comment