Pudhu Vannangal Song Lyrics

in Murattu Kaalai

பாடகி : எஸ். ஜானகி

இசையமைப்பாளர் : இளையராஜா

பெண் : ……………………..

குழு : ……………………..

பெண் : புது வண்ணங்கள்
கொஞ்சிடும் சோலை பல
எண்ணங்கள் துள்ளிடும்
வேளை எங்கும் மின்னுது
செவ்வந்தி மாலை இளந்தென்றலில்
ஆடுது சேலை

பெண் : செந்தாழம் பூவாசம்
என் நெஞ்சத்தை அள்ள
பூங்குயில் பாடுது பாட்டு
வண்ண மாமயில் ஆடுது
கேட்டு

பெண் : புது வண்ணங்கள்
கொஞ்சிடும் சோலை பல
எண்ணங்கள் துள்ளிடும்
வேளை

பெண் : மண்ணிலே வளர்ந்த
கொடி படர்ந்தது மரத்திலடி
பொன்னிலே நனைந்தது போல்
மலர்ந்தது வசந்தமடி

பெண் : பிஞ்சுகள் காய்த்து
கனிந்தாட மொட்டுகள் பூத்து
விரிந்தாட கள்ளில் மயங்கும்
வண்டுபோல் சுவை கண்டு
மயங்குது கண்விழி

பெண் : உல்லாசம்
பண்பாடி உற்சாகம்
கொண்டாட உள்ளத்தில்
பொங்குது ஆசை

பெண் : புது வண்ணங்கள்
கொஞ்சிடும் சோலை பல
எண்ணங்கள் துள்ளிடும்
வேளை எங்கும் மின்னுது
செவ்வந்தி மாலை இளந்தென்றலில்
ஆடுது சேலை

பெண் : செந்தாழம் பூவாசம்
என் நெஞ்சத்தை அள்ள
பூங்குயில் பாடுது பாட்டு
வண்ண மாமயில் ஆடுது
கேட்டு

பெண் : ……………………..

பெண் : அன்பிலே இணைந்த
சிட்டு மறைந்தது கூட்டிலடி
ரெண்டிலே ஒன்றை கண்டு
பிறந்தது நாணமடி

பெண் : இன்று நான்
மலர்ந்த பெண்ணானேன்
என்னவோ மயக்கம்
கொண்டேனே நெஞ்சில்
நினைத்ததை சொல்லவோ
அத சொல்ல தயங்குது
பெண்மையே

பெண் : ஒன்றோடு ஒன்றாக
எந்நாளும் கொண்டாட
உள்ளத்தில் வந்தது ஆசை

பெண் : புது வண்ணங்கள்
கொஞ்சிடும் சோலை பல
எண்ணங்கள் துள்ளிடும்
வேளை எங்கும் மின்னுது
செவ்வந்தி மாலை இளந்தென்றலில்
ஆடுது சேலை

பெண் : செந்தாழம் பூவாசம்
என் நெஞ்சத்தை அள்ள
பூங்குயில் பாடுது பாட்டு
வண்ண மாமயில் ஆடுது
கேட்டு

பெண் : தன நா நா நன நா நா
தன நா நா நன நா நா
தன நா நா நன நா நா

Leave a Comment