Roja Ondru Mutham Song Lyrics

in Komberi Mookan

பாடகர்கள் : எஸ்.பி.பாலசுப்ரமண்யம் மற்றும் எஸ். ஜானகி

இசை அமைப்பாளர் : இளையராஜா

ஆண் : ரோஜா ஒன்று முத்தம் கேட்கும் நேரம்
வானும் மண்ணும் ஒன்றாய் இன்று சேரும்
பெண் : மயக்கத்தில் தோய்ந்து
மடியின் மீது சாய்ந்து

ஆண் : ரோஜா ஒன்று முத்தம் கேட்கும் நேரம்
வானும் மண்ணும் ஒன்றாய் இன்று சேரும்

ஆண் : தங்க மேனி தழுவும்
பட்டுச்சேலை நழுவும்
பெண் : தென்றல் வந்து விளக்கும்
அது உங்களோடு பழக்கம்

ஆண் : சொர்க்கம் எங்கே என்றே தேடி
வாசல் வந்தேன் மூடாதே
பெண் : மேளம் கேட்கும் காலம் வந்தால்
சொர்க்கம் உண்டு வாடாதே

ஆண் : அல்லிப்பூவின் மகளே
கன்னித்தேனை தா…ஹோ

பெண் : ரோஜா ஒன்று முத்தம் கேட்கும் நேரம்
வானும் மண்ணும் ஒன்றாய் இன்று சேரும்
ஆண் : மயக்கத்தில் தோய்ந்து
மடியின் மீது சாய்ந்து

ஆண் : ரோஜா ஒன்று முத்தம் கேட்கும் நேரம்
பெண் : வானும் மண்ணும் ஒன்றாய் இன்று சேரும்

பெண் : வெண்ணிலாவில் விருந்து
அங்கு போவோம் பறந்து
ஆண் : விண்ணின் மீனை தொடுத்து
சேலையாக உடுத்து

பெண் : தேகம் கொஞ்சம் நோகும் என்று
பூக்கள் எல்லாம் பாய் போட
ஆண் : நம்மை பார்த்து காமன் தேசம்
ஜன்னல் சாத்தி வாயூற

பெண் : கன்னிக்கோயில் திறந்து
பூஜை செய்ய வா…ஹோய்

ஆண் : ரோஜா ஒன்று முத்தம் கேட்கும் நேரம்
வானும் மண்ணும் ஒன்றாய் இன்று சேரும்
பெண் : மயக்கத்தில் தோய்ந்து
மடியின் மீது சாய்ந்து

பெண் : ரோஜா ஒன்று முத்தம் கேட்கும் நேரம்
ஆண் : வானும் மண்ணும் ஒன்றாய் இன்று சேரும்

Leave a Comment